மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
53 minutes ago
பரமத்தி வேலூர் : நில அபகரிப்பு புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர். பரமத்தி வேலூரில் மதியழகன் என்பவருக்கு சொந்தமான இடத்தை அபகரித்து காந்தி கிளப் கட்டியதாக, முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன், பரமத்திவேலூர் டவுண் பஞ்., முன்னாள் சேர்மன் பொன்னுமணி மற்றும் காமராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நெடுஞ்செழியன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் பா.ம.க., வில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை வெங்கரையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை மூன்று மணியளவில் போலீசார் கைது செய்தனர்.
53 minutes ago