உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நில அளவை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு

 நில அளவை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு

சென்னை: 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ஈடுபடுவதால், நில அளவை பணிகளை மேற்கொள்ள முடியாது. இதற்கான கெடு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்' என, தமிழக நில அளவை துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சங்கம் வெளியிட்ட அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், நில அளவைத்துறை களப்பணியாளர்களை முழுமையாகவும், இரவிலும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. பெண் களப்பணியாளர்களை இரவு நேரத்தில் பணிபுரிய கட்டாயப்படுத்தக்கூடாது. கண்காணிப்பு பணி என்று கூறிவிட்டு, ஓட்டுச்சாவடி அலுவலர் பணியில் எங்களை ஈடுபடுத்தக் கூடாது. தேர்தல் பணியோடு, நில அளவை பணியையும் சேர்த்து பார்க்க வேண்டும் என, மேலதிகாரிகள் அழுத்தம் தரக்கூடாது. தேர்தல் பணியில் ஈடுபடும் காலத்தில், நில அளவை பணிக்கு, 15, 30, 45, 60 நாட்கள் கெடு என்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். இதுதொடர்பான சுற்றறிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று கருப்பு சட்டை அணிவதுடன், கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிவோம். நாளை, நாளை மறுநாள் விடுப்பு எடுத்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும். வரும், 28ல் நில அளவை துறை தலைமை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை