உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம்: தலைமைச் செயலர் ஆலோசனை

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம்: தலைமைச் செயலர் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து உயர் அதிகாரிகள், போலீஸ் டிஜிபி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். மதுரையில் வாக்கிங் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியையும் சிலர் கொலை செய்தனர். இதனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sundar
ஜூலை 18, 2024 22:12

அவரது முகம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அடைந்ததற்கான அடையாளம் காட்டுகிறது. Photo matches the title.


இராம தாசன்
ஜூலை 18, 2024 20:54

முன்பு காவல் நிலையம் / காவலர்களை கண்டால் ஒரு மரியாதை / பயம் இருந்தது. காவல் நிலையம் சென்று வந்தால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஆனால் இப்போது ஏதோ பிகினிக் போவது போல் சென்று வருகிறார்கள். எந்த பயமும் / மரியாதையும் இல்லை. இது தான் விடியா திராவிட கட்சிகளின் சாதனை


konanki
ஜூலை 18, 2024 20:00

தினம் ஒரு கட்சி தலைவர் பட்டபகலில் வெட்டி கொலை, இன்னிக்கு வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டில் கள்ள சாராயம் பாக்கெட் பட்டவர்த்தனமாக விற்பனை-68 பேர் சாவிற்கு பிறகும் - எங்கும் நிறைந்திருக்கும் கஞ்சா கொள்ளை பாலியல் குற்றங்கள் மொத்தத்தில் தமிழகம் அமைதி பூங்கா என ஊடகங்கள் கூட்டணி கட்சிகள் விழா எடுத்து முதல்வரை கௌரவிக்கும்.


G Mahalingam
ஜூலை 18, 2024 19:42

காவல் நிலையம் அந்தந்த மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கட்டுபாட்டில் உள்ளது.எப்படி நடவடிக்கைகள் எடுப்பார்கள்


மோகனசுந்தரம்
ஜூலை 18, 2024 18:56

தண்ட கருமாந்திரம்.


Indhuindian
ஜூலை 18, 2024 18:20

கையில் காயம் ஏற்பட்டதை பார்பதற்கு கண்ணாடி வேணுமா?


பேசும் தமிழன்
ஜூலை 18, 2024 18:18

ஆளுநர் அவர்கள் ஃபைல் எடுத்து கொண்டு டில்லி போனவுடன்....... இவர்கள் சட்டம் ஒழுங்கு பற்றி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.


sundarsvpr
ஜூலை 18, 2024 18:00

சட்டம் ஒழுங்கு எல்லா நாட்டிலும் நன்றாக உள்ளன. காவல் நிலையத்தில் திறந்த வீட்டில் நாய் நுழைவதுபோல் நுழைய அனுமதிக்கக்கூடாது. பார்வையாளர் பதிவேடு இருக்கவேண்டும் அங்கு பணிபுரிவர் தவிர மற்றவர்எல்லோரும் பார்வையாளர். ஆதார் அட்டை அவசியம் காண்பிக்கவேண்டும்.அப்போதுதான் காவல் துறை அடிமட்ட ஊழியர்களுக்கு மரியாதை இருக்கும். காவல் நிலையங்களில் கட்டுப்பாடு இருந்தால் தான் வெளியில் குற்றங்கள் குறையும் முக்கியமாய் அரசியல்வாதிகள் ஆதிக்கம் குறையும். அலுவலங்கள் நம் வீடுபோல் . அனுமதியின்றி மூன்றாம் நபர்கள் நுழையமுடியாது.


Ramesh Sargam
ஜூலை 18, 2024 17:26

தலமை செயலர் முகமே சொல்கிறது சட்டம், ஒழுங்கு ஒழுங்காக இல்லை என்று.


rama adhavan
ஜூலை 18, 2024 22:53

இவரையும் விரைவில் மாற்றி விடுவார்களோ? ?


Easwar Kamal
ஜூலை 18, 2024 17:00

ஸ்டாலின் இந்த செயலாளர் மாற்றிவிட்டு தமிழகத்தி சேர்ந்த ஒருவரை கொண்டு வந்தால் நல்லது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி