உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை: 4 பேர் சரண்

கோவையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை: 4 பேர் சரண்

கோவை: கோவை மாநகரம் ரத்தினபுரியை சேர்ந்தவர் அய்யனார் என்ற செல்வம் (26). மூன்று வருடங்களாக பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது உதயகுமார் என்ற வழக்கறிஞர் பழக்கமாகி உள்ளார். 2024 பிப்., அய்யனார் மற்றும் உதயகுமார் சேர்ந்து பைனான்ஸ் துவங்க திட்டமிட்டனர். இதன் பேரில், அய்யனார், திருப்பூரில் தனக்கு தெரிந்த நபரிடம் வட்டிக்கு ரூ.30 லட்சம் வாங்கி உதயகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் உதயகுமார் பைனான்ஸ் ஆரம்பிக்காமலும். கொடுத்த பணத்திற்கு வட்டியும் கொடுக்காமல் இழுத்து அடித்துள்ளார். இதனால் அய்யனார் மற்றும் அவருடைய நண்பர்கள் கௌதம் என்ற விருமாண்டி, அருண்குமார், அய்யனாரின் மைத்துனர் அபிஷேக் ஆகியோர் உதயகுமாரை வெட்டி கொலை செய்தனர் இது தொடர்பாக உதயகுமார் மனைவி நித்திய வள்ளி (42 ) நேற்று செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேற்கண்ட நான்கு பேரும், கோவில்பாளையம் போலீசில் சரணடைந்தனர்.

கண்டனம்

இக்கொலைக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை