உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!

போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நீலகிரி: நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த சிறுத்தை, சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு, யாரும் இல்லாத நிலையில் திரும்பிச் சென்றது. நீலகிரியில் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால், கரடி, சிறுத்தை, புலிகள் போன்ற ஆபத்தான வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகம். நேற்றிரவு, இங்குள்ள நடுவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை புகுந்தது. கதவு திறந்திருந்த நிலையில், சிறுத்தை ஸ்டேஷன் அறைகளுக்குள் ஒவ்வொன்றாக புகுந்து உலாவியது.இதை ஸ்டேஷனின் ஒரு அறையில் இருந்த போலீஸ்காரர் கவனித்து விட்டார். அவரை கவனிக்காத சிறுத்தை, ஒரு சில வினாடிகள் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு, திரும்பிச் சென்றது. சிறுத்தை வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர், உடனடியாக முன் வாசல் கதவை அடைத்தார்.சிறுத்தை போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்த சம்பவம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து ஸ்டேஷன் போலீசாரும், இரவு நேரத்தில் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடுவட்டம் ஸ்டேஷனுக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
ஏப் 29, 2025 14:43

உள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுக்க வந்த சிறுத்தை பணியில் யாரும் இல்லாததை கண்டு திரும்பியது. அடுத்து எஸ் பி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து இரண்டு புகார் மனு தர வாய்ப்புள்ளது. எனவே எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி புகார் மனு வாங்க தயாராக இருக்கவும்.


Raj
ஏப் 29, 2025 14:04

பாலியல் புகார் கொடுக்க வந்திருக்கலாம்.


B N VISWANATHAN
ஏப் 29, 2025 13:29

அனேகமாக அத்து மீறி அரசு அலுவலகம் வந்ததையடுத்து


KRISHNAN R
ஏப் 29, 2025 13:21

போலீஸ் ஸ்டேசன் கதவுகள் மூட வேண்டியதில்லை. ஆனால் கிரில் கேட் இருந்தால் மூ டி...கொள்ளலாம்


Rajah
ஏப் 29, 2025 12:48

சிறுத்தைகளை காட்டிற்குள் விடுவதுதான் நாட்டிற்கு நல்லது.


Ramesh Sargam
ஏப் 29, 2025 12:38

சிறுத்தை, சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு, யாரும் இல்லாத நிலையில் திரும்பிச் சென்றது. அப்படி என்றால் அங்கு இரவுப்பணியில் இருக்கவேண்டிய காவலர்கள் எங்கே சென்றார்கள்? ஒருவேளை எல்லாம் சரக்கு அடித்துவிட்டு, ஒரு ரூமில் கதவை சாத்திக்கொண்டு தூங்கிவிட்டார்களா...?


Ganesun Iyer
ஏப் 29, 2025 12:35

காட்ல வேட்டை ஆடறதுக்கு லஞ்சம் கேட்டுருப்பாங்க.. குடுக்க வந்திருக்கும்..


Ramesh Sargam
ஏப் 29, 2025 13:42

சரியாக koorineergal.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை