மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
3 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
3 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
4 hour(s) ago | 2
சென்னை: மதுபானங்களின் விலை, பிப்., 1 முதல் உயர்த்தப்படுவதாக 'டாஸ்மாக்' நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து, டாஸ்மாக் விடுத்த செய்திகுறிப்பு:மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வு, பிப்., 1ல் இருந்து அமலுக்கு வருகிறது.எனவே, 180 மி.லி., அளவு உடைய சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை, 10 ரூபாய்; அதே அளவு உடைய உயர்தர மதுபானங்கள் விலை, 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 650 மி.லி., அளவு உடைய பீர் வகைகளின் விலை, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில், 375 மி.லி., - 750 மி.லி., - 1,000 மி.லி., - 500 மி.லி., கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகை, அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றபடி விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago | 2