உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதற்கெல்லாம் கியாரன்டி தருவீர்களா? பிரதமருக்கு ஸ்டாலின் 23 கேள்விகள்!

இதற்கெல்லாம் கியாரன்டி தருவீர்களா? பிரதமருக்கு ஸ்டாலின் 23 கேள்விகள்!

சென்னை: பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் 23 கேள்விகள் எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

* பருவ காலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில், தமிழகத்தில் வட்டமடிக்கும் பிரதமரே... குஜராத் மாடல், சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கியாரன்டி கார்டுடன் லோக்சபா தேர்தலுக்கு வந்திருக்கும் பிரதமரே, இதோ இந்த கியாரன்டிகளை தருவீர்களா?* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்* எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படும்* தமிழகத்திற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு விலக்கு* ஒருபோதும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது* மாநில பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக் கடன்கள் ரத்து* ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் 400 ரூபாய்* வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்* தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை குறைப்பேன்; செஸ், சர் சார்ஜ் என்ற வரிக்கொள்ளை அறவே நீக்கம்* அமலாக்கத் துறை, -வருமான வரித்துறை, சி.பி.ஐ., ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்* மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப்பகிர்வு தருவேன்* வணிகர்களையும் சிறு, குறு தொழில்களையும் வதைக்கும் ஜி.எஸ்.டி., வரியில் சீர்திருத்தம்* கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்* வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை, பா.ஜ.,வின் ஊழல்கள் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்* கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்* சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்* தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்* 'அக்னிபாத்' திட்டத்தை ரத்து செய்வேன்* வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு* சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக் கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு* தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நுாலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்* குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்* சிறுபான்மை மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன்* இதற்கெல்லாம் நீங்கள் கியாரன்டி அளிக்கத் தயாரா?இல்லையென்றால், உங்கள் உத்தரவாதம் என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும், 'மேட் இன் பா.ஜ., வாஷிங் மெஷினுக்கு' மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 77 )

R Seshasayee
ஏப் 14, 2024 23:04

இது தமிழ் நாட்டின் ராகுல் இதுவும் Waste


Best india
ஏப் 14, 2024 11:33

இன்னுமா மோடி


vbs manian
ஏப் 11, 2024 20:58

உண்மையே பேசுவேன் என்ற காரண்டீ வருமா


Ramesh Sargam
ஏப் 11, 2024 20:42

நீட் ஒழிக்கப்படும், பூரண மதுவிலக்கு என்று பல guarantee நீங்கள் கொடுத்தீர்கள் அவைகள் என்னவாயிற்று முதல்வரே? மறந்து போச்சா??


k g Sekar
ஏப் 11, 2024 19:01

How Seinthil Balaji , Selvaganapathy and Anitha Radhakrishnan were washed in your washing machine


AaaAaaEee
ஏப் 11, 2024 18:43

சாம்பார் கரண்டி வேணும்முன்ன வாங்கிக்கோ ஒட்டு முடி தலையா


M S RAGHUNATHAN
ஏப் 11, 2024 18:20

ஜாதிவாரி கணக்கெடுப்பில் இஸ்லாமியர்கள், கிருத்துவ மக்களுக்கும் பங்குஉண்டா? அந்த இரு சமயங்களில் ஜாதிகள் கிடையாது என்று உங்கள் தந்தை கருணாநிதி சொல்லி இருக்கிறார் அந்த மதங்களில் ஜாதிகள் கிடையாது என்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கிடையாது என்று கேரண்டி தருவாரா ? டர்அம்பேத்கார் அரசியல் சாசனத்தில் பட்டியல் இனத்தவருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு கொடுத்தார்அதுவும் பத்து வருடங்கள் மட்டுமே


Kumar
ஏப் 11, 2024 14:59

guarantee தந்தால் முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்வீர்களா.


Prem Kumar
ஏப் 11, 2024 14:09

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தமிழக வளர்ச்சிக்கான அனைத்து நல திட்டங்களும் நிறைவேற்ற படும் என்றும் அதையே தனது உத்திரவாதமாக கருதி கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை தமிழகம் வந்த பிரதமர் கேட்டு கொண்டார். ஆனால் அதற்கு சரியாக பதிலளிக்க தயாரில்லாத தி.மு.க. தலைவரோ காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மக்கள் விரோத திட்டங்களான அறிவிக்கபட்ட ஒன்றுபட்ட இந்து மக்களை பிரிக்கும் ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு, இந்து மக்களிடையே மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஒரு மத வளர்ச்சிக்காக மட்டுமே செயல்படுத்த கூடிய நல- நல்வாழ்வு திட்டங்கள், நீட் தேர்வு ரத்து போன்ற நிறைவேற்ற கூடாதவைகளை மக்களுக்கு கேரண்டியாக தருவாரா என்று கேட்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடபட்ட அனைத்தையும் பா.ஜ.க. தனது பத்தாண்டு கால ஆட்சியில் எதிர்த்தே வந்ததை ஸ்டாலின் நன்கு அறிவார். அப்படிபட்ட அர்த்த மற்றவைகளை மீண்டும் நிறைவேற்ற கேரண்டி தருவாரா பிரதமர் என ஸ்டாலின் கேட்பது பிரதமரை கிண்டல் செய்யும் நோக்கமா?


C.SRIRAM
ஏப் 11, 2024 13:59

இவர் கூறிய அனைத்து குற்ற சாட்டுகளிலும் த்ரவிட விடியா அரசுக்கு பெரும் அங்கு உண்டு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை