தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கித் தந்த 10 தொகுதிகளில், நான்கு தொகுதிகளின் வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விதித்த நிபந்தனையால், அக்கட்சிகள் தொகுதி பிரிப்பதில் இழுபறி நீடிக்கிறது.தி.மு.க., கூட்டணியில் எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது முடிவாகி விட்டது. ஆனால், எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்பதை முடிவு செய்வதற்கான பேச்சு இன்னும் நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i2cnvxwt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற இயலாது
காங்கிரசுக்கு ஒதுக்கிய 10 தொகுதிகளில் திருவள்ளூர், திருச்சி, ஆரணி, கரூர் ஆகிய நான்கு தொகுதிகளில், வேட்பாளர்களை மாற்றினால் தான் அந்த தொகுதிகளை காங்கிரசுக்கு தர முடியும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். அவற்றில் யாரை நிறுத்த காங்கிரஸ் விரும்புகிறதோ அந்த பிரமுகர்களால் வெற்றி பெற இயலாது என தி.மு.க., கருதுகிறது.வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கேட்பு வாயிலாக இதை அறிந்து கொண்டதாக சொல்கிறது. ஆனால், வேட்பாளர்களை மாற்ற காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. இதனால், பல சுற்று பேசியும் முடிவு எட்டாமல் இழுபறி நீடிக்கிறது.பிரச்னைக்குரிய நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மாற்றுவது அல்லது தி.மு.க., தரும் தொகுதிகளை பெறுவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு கூட்டம், செல்வப்பெருந்தகை தலைமையில் சத்திய மூர்த்தி பவனில் இன்று கூடுகிறது. சீனியர் நிர்வாகிகளும், மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:தி.மு.க.,வுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. டில்லியில் உள்ள காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் அலுவலகத்தில் இருந்தும், தி.மு.க.,வின் தொகுதிப் பங்கீடு குழுவினருடன் தொலைபேசி வாயிலாக பேசினர். எனினும் தீர்வு ஏற்படவில்லை. சம்மதிக்கவில்லை
திருச்சி தொகுதியில், 5.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், திருநாவுக்கரசர் வெற்றி பெற்றுள்ளார். ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை நியாயப்படுத்தும் ம.தி.மு.க.,வுக்கு அந்த தொகுதியை எப்படி தாரை வார்க்க முடியும்? ஆரணிக்கு பதிலாக கடலுார் தருவதாகக் கூறுகின்றனர். நாங்கள் அரக்கோணத்தை கேட்கிறோம். கரூருக்கு பதிலாக தென்காசியை கேட்கிறோம். எதற்கும் தி.மு.க., சம்மதிக்கவில்லை. என்றாலும், எங்கள் கட்சியின் டில்லி மேலிடம் தி.மு.க., தலைமையிடம் உரிய முறையில் பேசி, நாங்கள் விரும்புகிற தொகுதிகளை வாங்கிக் கொடுக்கும். புதன் இரவுக்குள் எந்தந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர். - நமது நிருபர் -