உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றி நழுவினால், பதவியும் நழுவும்; முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

வெற்றி நழுவினால், பதவியும் நழுவும்; முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛வெற்றி நழுவினால், பதவியும் நழுவும்'' என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலில் கட்சி தொண்டர்களையும், கூட்டணியையும் ஒருங்கிணைத்து வெற்றியை அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து தேர்தல் பணி செய்ய வேண்டும். வெற்றி நழுவினால், அமைச்சர் பதவியும் நழுவும். 40 தொகுதிகளிலும் வெற்றி முக்கியம்.தீர்க்க முடியாத பிரச்னையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக மற்றும் பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும். அமைச்சர்களின் மாவட்டம் மற்றும் பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு லோக்சபா தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Bye Pass
ஜன 26, 2024 04:22

அப்பா இந்த மாதிரி இக்கட்டான நேரங்களில் தேர்தல் நிதி வசூலிப்பதில் தான் கவனம் செலுத்துவார் .. தேர்தலில் போட்டியிடுவோரை செலவையும் சமாளிக்க சொல்வார் ...


Suresh Pandian
ஜன 26, 2024 03:24

பலம் நழுவி பால் ல விழுந்த கதை நாபகம் வருது


S. Rajan
ஜன 26, 2024 01:52

பதவிக்காக தானே இருக்கிறீர்கள். அதில் வரும் பணம் கொள்ளை கொள்ளை எனலாம். நாட்டுக்கு உழைக்கவா தேர்தலில் நிக்கிறீர்கள்.


Ramesh Sargam
ஜன 26, 2024 00:14

திமுகவினருக்கு, குறிப்பாக இவருக்கு பயம் தொற்றிக்கொண்டுள்ளது. திமுக தோற்கவேண்டும். திமுக முற்றிலும் அழியவேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவேண்டும்.


Gurumurthy Kalyanaraman
ஜன 25, 2024 23:05

பதவி நழுவினால் பணமும் நழுவும். பின் கையும் நழுவி கம்பிதான் கிட்டும். இதையும் சொல்லி இருக்கலாமே சார்.


sankar
ஜன 25, 2024 20:36

சொந்த கட்சியினருக்கே மிரட்டல்?


sankar
ஜன 25, 2024 20:35

ஆட்சியே நழுவப்போகிறது - அப்புறம் என்ன


Suresh Babu. K
ஜன 25, 2024 20:13

பயம் ஆரம்பம்


Barakat Ali
ஜன 25, 2024 20:00

நிறைவேற்ற முடியாத, மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்தராத, போலி வாக்குறுதிகளால் தோல்வி ஏற்பட வாய்ப்பே இல்லையா ?? அமைச்சர்கள்தான் பொறுப்பேற்க வேண்டுமா ??


Premanathan S
ஜன 25, 2024 19:44

இந்த உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் உ.பி ஸ் பயப்பட மாட்டார்கள். உழைப்பது அப்பாவி தொண்டன் . அனுபவிப்பது ஒரே குடும்பம் வாழ்க தமிழ்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை