உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு ரூ.509 கோடி நன்கொடை வாரி வழங்கிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம்

தி.மு.க.,வுக்கு ரூ.509 கோடி நன்கொடை வாரி வழங்கிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் பத்திரங்கள் வாயிலாக தி.மு.க.,வுக்கு, 656 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில், லாட்டரி மார்ட்டின் மட்டும், 509 கோடி ரூபாயை தாராளமாக வழங்கியுள்ளார். தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய தகவல்களில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு 6.05 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.'தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும், இந்த திட்டத்தைச் செயல்படுத்திய, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rlpp2g4n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிஜிட்டல் தகவல்அதன்படி, தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில், எந்த தொகைக்கு, யாரால் வாங்கப்பட்டன என்ற தகவல் வெளியிடப்பட்டது.அதுபோல, கட்சி களுக்கு கிடைத்த நன்கொடை தொடர்பான விபரங்களும் தனியாக வெளியிடப்பட்டன. ஒரு பத்திரம் யாரால் வாங்கப்பட்டது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப் பட்டது, தேர்தல் பத்திரங்களின் எண் உள்ளிட்ட தகவல்களை வெளியிடும்படி உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், சீலிடப்பட்ட உறையில் இருந்த, எஸ்.பி.ஐ., ஏற்கனவே அளித்த தகவல்கள் மற்றும் டிஜிட்டல் தகவல்களை, உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தது.அதனடிப்படையில், புதிய தகவல்களை தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் நேற்று பதிவு செய்தது. இந்த தகவல்கள், கடந்த ஆண்டு நவம்பரில் அங்கீகாரம் பெற்ற, அங்கீகாரம் பெறாத, 523 கட்சிகள் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்து உள்ளன. அறிக்கைகடந்த 2018ல் தேர்தல் பத்திரங்கள் திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து பெறப்பட்ட நன்கொடை விபரங்களும் இதில் இடம் பெற்றிருக்கக் கூடும் என்று தெரிகிறது. தி.மு.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே, நன்கொடை வழங்கியவர்களின் விபரங்களை, இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. மற்ற கட்சிகள், இந்த தொடர்ச்சி 11ம் பக்கம்நன்கொடையாளர்கள் விபரத்தை தெரிவிக்கவில்லை. தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, பா.ஜ.,வுக்கு அதிகபட்சமாக 6,986.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கடுத்ததாக, மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுக்கு 1,397 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு 1,334 கோடி ரூபாயும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு 1,322 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. ஒடிசாவில் ஆளும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு, 944.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அதிக நன்கொடை பெற்ற கட்சிகள் பட்டியலில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க., ஆறாவது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு, 656.6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்.,குக்கு 442.8 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 89.75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு அதிகளவில் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில், லாட்டரி மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம், 1,368 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ளது. இதில், 509 கோடி ரூபாயை தி.மு.க.,வுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. தி.மு.க.,வுக்கு நன்கொடை அளித்தோர் பட்டியலில், 105 கோடி ரூபாயுடன் மேகா இன்ஜினியரிங், 14 கோடி ரூபாயுடன் இண்டியா சிமென்ட் ஆகியவையும் உள்ளன. இந்த புதிய பட்டியலின்படி, அ.தி.மு.க.,வுக்கு 6.05 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிடைத்துள்ளது.

புதிய வழக்கு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதில், 2019 ஏப்., 12 முதல், 2024 பிப்., 15ம் தேதி வரையிலான தகவல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், குடிமக்கள் உரிமை அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:தேர்தல் பத்திரங்கள் திட்டம் 2018ல் அறிமுகமானது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2019 ஏப்., 12ம் தேதியில் இருந்து தகவல்கள்வெளியிடப்பட்டுள்ளன. மொத்த தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் இது, 76 சதவீதம்தான். மீதமுள்ள, 24 சதவீத தகவல்கள் குறித்தும் மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ளது.கடந்த 2018 மார்ச் 1 முதல் 2019 ஏப்., 11ம் தேதி வரையில், 4,002 கோடி ரூபாய் மதிப்புள்ள 9,159 பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன. அந்த விபரங்களையும் வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

YESPEE
மார் 18, 2024 13:50

கிடைத்த விவரங்களை ஏன் தெரிவிக்கவில்லை? மூடி மறுப்பதேன்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 18, 2024 11:26

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்துகொண்டே கேரளாவில் கிரிமினல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த இதே லாட்டரி மார்ட்டினுக்காக நீதிமன்றத்தில் வாதாடி அவரை விடுவிக்க முயன்றவர் திரு. இராமன் அவர்கள். இது எந்த வகையில் நியாயம் என்று பத்திரிகைகள் வினா எழுப்பியதும் முதல்வரின் ஆணைக்கிணங்க என்று மட்டும் பதில் வந்தது. அப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த மார்ட்டின் வெறும் 509 கோடிகள் மட்டுமே கொடுத்தார் என்பதை நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது.


RAMAKRISHNAN NATESAN
மார் 18, 2024 11:11

எல்லாம் ஒத்துப்போகும் .....


rajen
மார் 18, 2024 11:01

தடை செய்ய பட்ட லாட்டரி, சாராயம், போதை பவுடர்கள் இவைகளில் இருந்துதான் இவர்களுக்கு நன்கொடை மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் பணம்


duruvasar
மார் 18, 2024 10:59

திமுக ஒருவேளை DAVC அமைப்பை ஏவி பயப்படுத்தி இந்த தொகையை வாங்கியிருப்பார்களோ? இந்தியா சிமென்ட்ஸை பொருத்தவரை நிதியுடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைமை பதவியையும் கொடுத்துள்ளது ஒரு புது விஞ்ஞான முயற்ச்சி. சீனிவாச அய்யருக்கு பாராட்டுக்கள். சாப்பாடு போட்டு கையில் தட்சிணை கொடுத்தனுப்பவது அவாளோட வழக்கம்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 18, 2024 11:21

இந்தியா சிமெண்ட்ஸ் பற்றி உங்களுக்கு முழு தகவலும் தெரியவில்லை என்றே தோன்றுகிறது


sankar
மார் 18, 2024 10:47

லாட்டரி தமிழகத்தில் மீண்டும் அனுமதிக்க படும்? அப்போது சொன்னது- விழுந்தால் வீட்டுக்கு - விழாவிட்டால் நாட்டுக்கு- இப்போது - என்ன சொல்வார்கள்


கனோஜ் ஆங்ரே
மார் 18, 2024 10:29

ஏன் தெரிவிக்கலை...அப்ப எஸ்பிஐ திருடெனுக்கு துணை போயிருக்கானுங்க...?


கனோஜ் ஆங்ரே
மார் 18, 2024 10:27

ஏறக்குறைய ஏழாயிரம் கோடி யார் கொடுத்தது.. அதைச் சொல்லு. ஏன் அதை மறைக்குற...?


Sampath Kumar
மார் 18, 2024 09:35

உங்க பிஜேபிக்கு கிடைத்ததை விட ரொம்ப கம்மிதான் கம்பர் பண்ணி பார்த்து அதுக்கும் ஒரு செய்ததையை போடுங்க பார்க்கலாம்


sankar
மார் 18, 2024 10:45

கும்மிடிபூண்டிக்குள்ள குதிரை ஓட்டுபவனுக்கு எப்படி இவ்ளோ நன்கொடை? என்பதுதான் பிரதான கேள்வி


SIVA
மார் 18, 2024 17:14

பழைய கதை மெகா கூட்டணி அமைத்தும் சென்ற சட்டமன்ற தேர்தலில் சேலம் , கோவை தாண்ட முடிய வில்லை ....


Dwarakanath Putti
மார் 18, 2024 09:35

Bjp voda therdhal pathiratha patri sollungal.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை