உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரங்களுக்கு திருமணம் செய்வது புனிதமானது; உயர்நீதிமன்றம் கருத்து

மரங்களுக்கு திருமணம் செய்வது புனிதமானது; உயர்நீதிமன்றம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை :மரங்களுக்கு இடையே திருமணம் செய்து வைப்பதை புனிதமாக கருதுவதாக கருத்து பதிவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோயில் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண உத்தரவிட்டது.கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அறக்கட்டளை நிறுவனர் தாக்கல் செய்த மனு: மற்றொரு அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்யக்கோரி பதிவுத்துறை ஐ.ஜி., கரூர் மாவட்ட பதிவாளர், மேலக்கரூர் சார்பதிவாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். ஒரு கோயில் வளாகத்தில் உள்ள வேம்பு, அரசமரத்திற்கு திருமணம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: இக்கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, அரசமரம் மணமக்கள். அரசமரம் ஆணாகவும், வேப்ப மரம் பெண்ணாகவும் கருதப்படுகிறது. மனுதாரர்,'வேப்ப மரம் இளமையானது. திருமணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தேதி மங்களகரமான நாள் அல்ல,' என ஆட்பேசம் தெரிவிக்கிறார்.மரங்களுக்கு இடையே திருமணம் செய்து வைப்பதை மிக புனிதமாக கருதுகிறேன். பக்தி மற்றும் மத அம்சங்களை மறந்து விடுவோம். மரங்கள் இயற்கையின் ஒரு அங்கம். மரங்கள் இல்லையெனில் நாம் ஒரு நொடி கூட வாழ முடியாது.வேப்ப மரம் பழமையானது. வயது வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சேபனை காலாவதியான ஆணாதிக்க கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அவரை விட 6 வயது மூத்தவர்.நீதிமன்றங்களின் செயல்பாடு தகராறுகளை தீர்ப்பது மட்டுமே. எல்லா சர்ச்சைகளும் தீர்ப்பிற்கு ஏற்றதாக இல்லை. தீர்வு காணக்கூடியவை மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். எதிர்மனுதாரர்களில் ஒருவரான தனிநபர் சார்பில் மார்ச் 18 முதல் 20 வரை நடத்தும் 'ஏழுதிங்கள் சீர் விழா' நடத்துவதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.வருவாய்த்துறை அதிகாரிகளின் சமாதான கூட்டத்தில் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படும் என நம்புகிறேன்.ஒரு அறக்கட்டளை 2016 ல் துவக்கப்பட்டது. அது கோயிலை நிர்வகிக்கிறது. இது பொதுக்கோயில் அல்ல. இது ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த குடும்பங்களால் வழிபடப்படுகிறது. மற்றொரு அறக்கட்டளை 2024 ல் பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது.முதலில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை கோயிலை நிர்வகிக்கிறது. ஒரு புதிய அறக்கட்டளை திடீரென கோயிலின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது. உண்மையில் முதலில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் இரண்டாவது அறக்கட்டளையை உருவாக்கியுள்ளனர். இதை சிவில் நீதிமன்றம் மூலம்தான் தீர்வு காண வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 16:13

அடியாத்தி ..... நாட்டுக்கு உபயோகமா இப்பிடிக்கா நல்ல நல்ல விசயம்லாம் டிஸ்கசு பண்ணுறாங்களே ....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 16:12

ஒரு மார்க்கமாதான் திரியராங்க .......


Shiva
மார் 17, 2024 16:05

ஐயா! அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும்?


சிவா
மார் 17, 2024 15:56

வர வர சில நீதி அரசர்களின் பேச்சு விஞ்ஞான அறிவையும் மிஞ்சுகிறதே !????


பெரிய ராசு
மார் 17, 2024 07:53

எங்கிருந்ததா வாராணுக புதுசு புதுசா கிளப்பரணுக


Mani . V
மார் 17, 2024 06:11

அப்புடிங்களா? சரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. அதுனால, இடத்தை காலி செய்து நீரை சேமிக்க வழிவிடுங்கள் சாரே.


Krishnan
மார் 17, 2024 05:24

நீதிமன்றம் இப்போதெல்லாம் சிரிப்பின் வடிவமாயிற்று...


Priyan Vadanad
மார் 17, 2024 00:34

அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கும் திருமணம் புனிதமாம். கலப்பின திருமணம். இதை ஏன் புனிதமாக கருதக்கூடாது? இதையும் நீதியரசர் குறிப்பிட்டு ஏன் கலப்பு திருமணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக கூடாது?


Bye Pass
மார் 17, 2024 00:17

மரங்களுக்கு ஓரின சேர்க்கை அங்கீகரிப்பாங்களா ?


Oviya Vijay
மார் 17, 2024 00:14

என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க எஜமான்... ஆனா மரத்தை வெட்ட மட்டும் எங்கேயும் அனுமதி கொடுத்துராதீகோ... புண்ணியமா போகும் உங்களுக்கு...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை