உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பம்பரம் சின்னம் ஒதுக்க ம.தி.மு.க., கோரிக்கை

பம்பரம் சின்னம் ஒதுக்க ம.தி.மு.க., கோரிக்கை

சென்னை : லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி, ம.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., வேட்பாளர்கள், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இம்முறை தங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க., விரும்புகிறது.எனவே, வரும் லோக்சபா தேர்தலில், தங்கள் வேட்பாளருக்கு, பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி, ம.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேற்று, தலைமை செயலகத்தில் உள்ள, அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.அப்போது, லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி, தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ள கடிதத்தின் நகலை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Balaji
பிப் 17, 2024 03:35

குடுத்தா மட்டும் என்ன செய்யப்போறீங்க? நிக்கப்போறது என்னமோ பொட்டி வாங்கிட்டு உதைன்னா சொல்ற சின்னத்துல.. இந்த வீம்புக்கு மட்டும் கொறச்சலே இல்ல..


Kuppan
பிப் 16, 2024 20:52

பம்பரம் சின்னம் கிடைக்க வில்லை என்றால், "எலும்பு துண்டு" சின்னம் கேட்டு வாங்குங்கள் அதுதான் பொருத்தமாக இருக்கும்


SIVA
பிப் 16, 2024 20:48

நாமளும் சுத்தி சுத்தி டயர்ட் ஆகிட்டோம் , சுத்தி சுத்தி எல்லா கூட்டணிக்கு போயிடு வந்துட்டோம் , மத்தவங்க தான் நம்மள வச்சு சுத்தி சுத்தி விடுறாங்க , ரொம்ப பேசுனா சுத்தல விடுறாங்க ......


Easwar Kamal
பிப் 16, 2024 18:28

இலங்கை தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து பணத்தை கறந்து மகனுக்கு சொத்து சேர்த்தாச்சு. சும்மா பேருக்கு ஒரு கட்சி உங்களுக்கு பின்னல் விஜாத்காந் கட்ச் நிலைமைதான். பேசாமல் திமுக கட்சியோட ஜோதில ஐக்கியம்ஆகி கொடுக்குற பணத்தை வச்சுக்குட்டு செட்டில் ஆயிரவேண்டியதுதானே.


sridhar
பிப் 16, 2024 18:04

தேர்தல் கமிஷன் கிடக்கட்டும் , திமுக உனக்கு பம்பர சின்னம் கொடுக்கிறதா பாரு. அடிமைக்கு ஆசை எதுக்கு. கம்முனு கிட.


Sck
பிப் 16, 2024 13:14

சரி சின்னத்த வாங்கி என்ன செய்யறதா உத்தேசம்.


vadivelu
பிப் 16, 2024 18:23

கட்சிக்கு ஒட்டு போடுறவங்களே மூன்று விழுக்காடுகளுக்கும் கீழே, இதிலே சின்னம்தான் முக்கியமா.


duruvasar
பிப் 16, 2024 12:10

இப்போதெல்லாம் பம்பரம் ஹீரோயின்கள் தொப்புளில் சுற்றுவதற்க்கு மட்டுமே பயன் படுகிறது.இந்த காட்சி நிறைய திரைப்படங்களில் பார்க்கலாம். அதுபோக இவர் எதிர்காலத்தில் பம்புவார் என யோசித்து தான் சிம்பாலிக்காக இருக்க பம்பரம் சின்னத்தை கேட்டு பெற்றிருப்பாரோ ?


Venkatesan
பிப் 16, 2024 11:33

என்னையா இது எல்லாரும் இப்படி கழுவி கழுவி ஊதுறீங்க? அந்த ஆள் ஏதோ வயது பொழப்புக்கு அறிவாலயத்து வாசல்ல மண் சோறு சாப்புடுறாரு. அது உங்களுக்கு எல்லாம் பொறுக்கலியா?


N. Srinivasan
பிப் 16, 2024 11:07

பம்பரம் சின்னம் கொடுத்தாலும் அதற்கு ஒரு சாட்டை தேவை அது எந்த கட்சியோ இந்த முறை


Muralidharan raghavan
பிப் 16, 2024 11:53

சூப்பர்


ராமகிருஷ்ணன்
பிப் 16, 2024 10:51

வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணையற்ற முண்டங்களாக இருப்பவர்கள் மட்டுமே இவரின் கட்சியில இருப்பார்கள்.


MANIMARAN R
பிப் 16, 2024 12:08

அடி ரெம்ப பலமா


மேலும் செய்திகள்









புதிய வீடியோ