உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை சி.பி.ஐ.,யின் இரண்டு அதிகாரிகளுக்கு பதக்கம்

சென்னை சி.பி.ஐ.,யின் இரண்டு அதிகாரிகளுக்கு பதக்கம்

சென்னை : சென்னை சி.பி.ஐ., ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வரும் இரு அதிகாரிகளுக்கு, ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், போலீஸ் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு, ஜனாதிபதியின் பதக்கம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும். இதில், சி.பி.ஐ., அதிகாரிகளும் அடக்கம். இந்தாண்டிற்கான ஜனாதிபதி பதக்கத்திற்கு, சி.பி.ஐ.,யில் இருந்து, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், சென்னை சி.பி.ஐ., ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த, கூடுதல் எஸ்.பி., பத்மகுமார் மற்றும் டி.எஸ்.பி., மணி ஆகியோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பத்மகுமார், கடந்த 1984ம் ஆண்டு சி.பி.ஐ.,யில் சேர்ந்துள்ளார். நாட்டின் பல இடங்களில், சி.பி.ஐ., பிரிவுகளில் பணியாற்றியுள்ள இவர், ஊழல் தடுப்பு தொடர்பான, பல்வேறு முக்கிய வழக்குகளில், சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இதற்காக, இவருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், கடந்த 1995ம்ஆண்டு இன்ஸ்பெக்டராக சி.பி.ஐ.,யில் இணைந்த மணி, கடந்தாண்டில் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். அன்று முதல், சென்னை சி.பி.ஐ., ஊழல் தடுப்புப் பிரிவில், கொச்சியில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் அமைதிக்கான விருதை, கடந்த 2002ம் ஆண்டு பெற்றார். இவர், சி.பி.ஐ., விசாரித்த, பல கொலை மற்றும் ஊழல் தடுப்பு வழக்குகளில், சிறப்பாகப் பணியாற்றியதற்காக இந்தப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ