உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சரை சந்தித்து நிதி கேட்ட மந்திரி மகேஷ்

மத்திய அமைச்சரை சந்தித்து நிதி கேட்ட மந்திரி மகேஷ்

சென்னை:மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தில், நடப்பு நிதியாண்டில், தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியில், 1,138 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக, நம் நாளிதழில் கடந்த வாரம் விரிவான செய்தி வெளியானது. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி துறை இணையாததால், தமிழகத்துக்கு இந்த நிதியிழப்பு ஏற்பட்டது. நம் நாளிதழ் வாயிலாக செய்தி அறிந்த, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், நிதி வராதது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அவசர, அவசரமாக டில்லி சென்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், தமிழக அரசுக்கு வரவேண்டிய, 1,138 கோடி ரூபாய் நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் உடன் சென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ