மருத்துவமனையில் அமைச்சர் மகேஷ் திடீர் அனுமதி
சென்னை:வயிற்று வலி காரணமாக, தனியார் மருத்துவமனையில் அமைச்சர் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு நேற்று காலை ஆய்வுக்கு சென்றார். சென்னை திரும்பியதும், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி, மருத்துவமனைக்கு சென்று அமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.