உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்காது அமைச்சர் மூர்த்தி உறுதி

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்காது அமைச்சர் மூர்த்தி உறுதி

மேலுார்: அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதால் மதுரைக்கு வர இருப்பதாக கூறப்படும் ஆபத்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று, இக்கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, அரிட்டாபட்டி, தும்பைபட்டி ஊராட்சி தலைவர்கள் வீரம்மாள், அயூப்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், 2022ல், தமிழகத்திலேயே முதல் பறவைகள் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் தற்போது டங்ஸ்டன் கனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.இத்திட்டத்தை தமிழக அரசு தடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் நிறைந்த மதுரை மாவட்டத்தை தமிழ் பண்பாட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:

தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒப்புதலின்றி டங்ஸ்டன் எடுக்க முடியாது. தமிழக அரசு 100 சதவீதம் அனுமதி தராது. இதுதொடர்பாக யார் ஆய்வு செய்ய வந்தாலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தமிழக அரசுக்கு இது குறித்து எந்த விண்ணப்பமும் வராத நிலையில், இதை பெரிதாக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.இதன்மூலம் மதுரைக்கு வர இருப்பதாக கூறப்பட்ட ஆபத்து விலகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை