உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.டி., ஸ்கேனில் அமைச்சர்கள்: எச்.ராஜா எச்சரிக்கை

இ.டி., ஸ்கேனில் அமைச்சர்கள்: எச்.ராஜா எச்சரிக்கை

திருச்சி: 'தமிழகத்தின் அனைத்து மூத்த அமைச்சர்களும் 'இ.டி., ஸ்கேனில்' உள்ளனர் என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.திருச்சியில், நேற்று நடந்த பா.ஜ., கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பிரதமர் மோடி, தமிழகம், லட்சத் தீவு, கேரளா மாநிலங்களுக்கு, 2 நாள் சுற்றுப் பயணம் வந்துள்ளார். அவர் வரும் போதெல்லாம், தமிழகத்தின் மேம்பாட்டுக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைக்கிறார்.கடந்த ஒன்பது ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளன. மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் பட்டியல் தயாரித்து, அவர்களை நேரடியாக சந்தித்து, லோக்சபா தேர்தலுக்கு ஓட்டு சேகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.பிரதமர் வருகையின் போது, மக்களின் உற்சாகமான வரவேற்பு, தமிழகத்தின் அரசியல் களம் வேமாக மாறி வருவதை தெரியப்படுத்துகிறது. மழை வெள்ள பாதிப்பு போன்ற சம்பவங்கள், மாநில அரசின் மீது மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பாதுகாப்புக்கென வாகனங்கள் வாங்குவதை ஒரு குறையாக சுட்டிக்காட்ட முடியாது.சென்னையில் வெள்ள நீர் வெளியேறும் வகையில், 4,000 கோடி ஒதுக்கி, 92 சதவீதம் பணிகள் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறிய நிலையில், 42 சதவீதம் மட்டுமே செலவு செய்திருப்பது போன்றவற்றை தான் குறைகளாக, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.மாநில அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. மழை வெள்ளத்தில் மக்கள் மூழ்கியதை விட, ஊழலில் தமிழகம் மூழ்கியது தான் அதிகம். மத்திய அரசு சொல்லித் தான் அமலாக்கத் துறை ரெய்டு செல்ல வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லை.செந்தில் பாலாஜி, வேலு, துரைமுருகன் என, தமிழகத்தின் அனைத்து மூத்த அமைச்சர்களும் 'இ.டி., ஸ்கேனில்' உள்ளனர். ஒவ்வொருவராக நடவடிக்கைக்கு உள்ளாவர். முதல்கட்டமாக பொன்முடி சுப முகூர்த்தம் செய்து வைத்துள்ளார். அடுத்து, திருச்சியா... திருச்சி இல்லையா என்று இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.Ramakrishnan
ஜன 03, 2024 23:12

இப்படித்தான் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லைன்னு புலம்பிக்கிட்டே இருந்தாரு. இவருக்கு பின்னால அரசியலுக்கு வந்து மாநிலத் தலைவர் ஆயிட்டாரு அண்ணாமலை. தலைவரா இருந்த ஒருத்தரு அமைச்சர் ஆயிட்டாரு. இன்னும் 3பேர் கவர்னர் ஆயிட்டாங்க...


duruvasar
ஜன 03, 2024 15:01

மழை வெள்ளத்தின் பொது தஞ்சை மன்னர் சென்னைக்கு வந்து உதவி புரிந்ததை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.


தஞ்சை மன்னர்
ஜன 03, 2024 11:29

நீ இன்னும் இருக்கிய மழை வெள்ளம் புயல் எல்லாம் வரும்போது ஓடி ஒளிஞ்சிட்டு இப்ப என்ன வீராப்பு வேண்டி இருக்கு உனக்கு என்று தெரியவில்லை போய் எதாவது மனநல மருத்துவமனையில் போய் வைத்தியம் பார்த்து கொள்ள வேண்டியது தானே


K.n. Dhasarathan
ஜன 03, 2024 10:54

இவர் என்ன ஹச், ராஜா வா அல்லது உதார் ராஜா வா ?


g.s,rajan
ஜன 03, 2024 10:17

More Crorepathis are also found in the ruling Party in the Centre....


தமிழ்
ஜன 03, 2024 09:57

அதுமட்டும்தான் பிஜேபி க்கு தெரியும்.அமலாக்காத்துறை பிஜேபி யின் கொள்கை பரப்பு செயலாளராக மாறி மிகவும் நீண்ட நாட்களாகி விட்டது.


g.s,rajan
ஜன 03, 2024 07:41

BJP Party is also not Mr.Clean .....


vadivelu
ஜன 03, 2024 11:04

அப்படியா, அப்ப அவிங்கள நாம இன்னொரு இருபது வருடங்கள் கழித்து ஆட்சிக்கு வரும்போது பார்த்துக்கலாம்.இப்ப திருடர்களை ஆதரிக்க வேண்டாம்.


அப்புசாமி
ஜன 03, 2024 07:34

பிரதமர் வரும் போது பாதையில் நிக்கக் கூட இவருக்கு அழைப்பு வரல போலிருக்கு.


Duruvesan
ஜன 03, 2024 07:24

Bjp நோட்டவை தாண்டுமா பாரு மொதல்ல, சரி ஜெயிச்சா என்ன கிழிப்பீங்க. மருமவன் மவன் ன தொட முடியுமா? ஹிந்துன்னா வேசி மகன்னு சொன்னான், பொத்திட்டு தானே இருந்தீங்க,


Svs Yaadum oore
ஜன 03, 2024 06:53

கட்சி மாவட்டத் தலைவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தொழில் செய்வோர்களிடம், தொடர் 'வசூலிலும்' ஈடுபடுகின்றனர்....மக்களை சந்தித்து களப் பணியாற்றாமல் உள்ளனர்...கட்சியில் புதிதாக சேரும் நபர்களிடம், போஸ்டர் அச்சடித்து தருமாறும், பேனர் வைக்குமாறும் கேட்டு, தொடர்ந்து செலவு செய்ய வற்புறுத்துகின்றனர்....இப்படியெல்லாம் ப ஜா க மாவட்ட தலைவர்கள் பற்றி இன்று செய்தி ....இதையும் கொஞ்சம் கவனிக்கட்டும் ...


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ