மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
49 minutes ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 11
கோவை: கோவையில் நேற்று நடந்த பிரமாண்ட, 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில், சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்களும், தொண்டர்களும் கூடியிருந்து வரவேற்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி 2.5 கி.மீ., துாரம் பயணித்தார். வழி நெடுக மக்கள் திரண்டு நின்று வரவேற்றதால், சந்தோஷம் அடைந்த அவர், இரு கரங்களையும் காட்டி பூரிப்படைந்தார்.
ஆர்.எஸ்.புரம் சந்திப்பில், தலைமை தபால் நிலையம் அருகே, 1998ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, புகைப்படங்கள் அச்சிட்ட 'பிளக்ஸ் பேனர்' வைக்கப்பட்டிருந்தது. அப்புகைப்படங்களை பார்த்து மனம் கலங்கிய பிரதமர் மோடி, சற்று நேரம் மனமுருக வேண்டி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.நிகழ்ச்சி முடிந்ததும், ரேஸ்கோர்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு பிரதமர் வந்தடைந்தார். அவர் தங்கியிருக்கும் பகுதியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, இன்று காலை 9:30 மணிக்கு பீளமேடு விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார்.
ரோடு ஷோ நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் மதியம் 3:00 மணி முதல் காத்திருந்தனர். அவர்களின் தாகம் தீர்க்க, பா.ஜ.,வினர் தண்ணீர் பாட்டில் சப்ளை செய்தனர். கோவை குஜராத் சமாஜம் சார்பில், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சிந்தாமணி பகுதியில் இஸ்லாமியர் குடும்பத்தினர், கைக்குழந்தையுடன் குடும்பமாக, பிரதமர் மோடியை பார்க்க ஆவலாய் காத்திருந்தனர்.
49 minutes ago
1 hour(s) ago | 11