உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் மனைவி ராம பக்தை; 3 நாட்கள் விரதம் இருப்பார்: ஆ.ராஜா திடீர் ‛‛தாஜா

என் மனைவி ராம பக்தை; 3 நாட்கள் விரதம் இருப்பார்: ஆ.ராஜா திடீர் ‛‛தாஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நீலகிரி: ''என் மனைவி ராம பக்தை; அவர் சனிக்கிழமை ராமருக்காவும், வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காகவும் என வாரம் 3 நாட்கள் விரதம் இருந்தார்'' என நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராஜா பேசியுள்ளார்.நீலகிரி மாவட்டம் குன்னூரில், திமுக வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் அனைத்து இடங்களிலும் ஊழல் உள்ளது. பங்குசந்தை உள்பட அனைத்து இடங்களிலும் ஊழல் செய்துவிட்டு, நான் தான் விஸ்வகுரு, உலகத்தின் தலைவர் என சொல்கிறார்கள். என் மனைவி ராம பக்தை. அவர் சனிக்கிழமை ராமருக்காவும், வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காகவும் என வாரம் 3 நாட்கள் விரதம் இருந்தார். வீட்டில் பூஜை அறை இருந்தாலும் ஒருநாள் கூட நான் உள்ளே சென்றது இல்லை. எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை கும்பிடட்டும்; அதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆன்மிகமும், பக்தியும் தனிமனித தேவைக்காகவே. என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது எனக்கு கோபம் இல்லை; கும்பிட்டு விட்டுப்போ. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

Balaji
ஏப் 06, 2024 05:27

அயோத்தி ராமர் வேண்டும் அயோக்கிய ராஜா வேண்டாம்


HoneyBee
ஏப் 05, 2024 16:46

இந்து அடிமைகள் மாறாத வரை இவர் போன்றவர்கள் இப்படி தான் பேசுவார்கள்


Sampathkumar Sampath
ஏப் 04, 2024 15:30

ஹி ஹீஹீஹீ கடவுளே கடவுளே


Ramesh
ஏப் 04, 2024 13:21

ஓட்டுக்காக எதையும் பேசக்கூடாது


sundarsvpr
ஏப் 04, 2024 09:05

ஆண்டிபட்டி ராஜா மனைவி கணவனுக்காக பிரார்த்தனை செய்தார் பிரார்த்தனை உண்மையானது


Barakat Ali
ஏப் 04, 2024 08:12

ஹிந்து என்றால் வே மகன் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்


M S RAGHUNATHAN
ஏப் 03, 2024 19:02

அப்படி என்றால் ஏன் அவர் இறந்ததும் கிருத்துவ முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தீர்கள் அவர் ஹிந்து ஆக தானே இறந்தார் நீங்கள் கிருத்துவர் என்பதால் கிருத்துவ முறைப்படி அடக்கம் செய்தீர்களா? நீங்கள் பட்டியல் இனத்தவர்க்காக ஒதுக்கப் பட்ட தொகுதியில் ஏன் நிற்கிறீர்கள் இது விதி மீறல்


HoneyBee
ஏப் 03, 2024 12:55

இப்ப தெரியாதா ராமரோட பவர் நீ கூட அவர் கால்ல விழ வேண்டும் தப்பாது ஆனால் நீ இந்த முறை தோற்று ஓட வேண்டும் அதை அவர் செய்ய வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ராம்


Ramesh Sargam
ஏப் 03, 2024 12:12

தைரியம் இருந்தால் உன் மனைவிடம் கடவுளை நம்புபவன் undefined என்று கூறிப்பார் பார்க்கலாம்


Udaneswara bhat
ஏப் 03, 2024 11:32

இந்த ஆளு ஓட்டுக்காக எதையும் பேசும் மட்டமான மனிதன் நாங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் இந்த கட்சியை புறக்கணிக்க வேண்டும் இந்த திருட்டு முன்னேற்ற கழகத்தின் அனைத்து கூட்டணி கட்சி களையும் தான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை