மேலும் செய்திகள்
புதிய வகுப்பறைகள் திறப்பு விழா
12-Jul-2025
பல்லடம்: பல்லடம் அருகே, பள்ளி வகுப்பறைக்குள் மது அருந்திவிட்டு, வெளியே மலம் கழித்து சென்ற சமூக விரோதிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை, பள்ளி வளாகத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள், வகுப்பறைகள் திறந்து கிடப்பது கண்டு, தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் தெரிவித்தனர். பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியை, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் கூறுகையில், 'தலைமை ஆசிரியை அறையை உடைத்து, அங்கிருந்த சாவியை பயன்படுத்தி, வகுப்பறைகளை சமூக விரோதிகள் திறந்துள்ளனர். கணினி அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த 'டிவி'யை ஆன் செய்து, ஹாயாக மது அருந்தியபடியும், புகை பிடித்தும் பொழுதை கழித்துள்ளனர். 'வகுப்பறைக்கு வெளியே மலம் கழித்துவிட்டு, எடுத்து வந்த சாவியை மீண்டும் தலைமை ஆசிரியை அறைக்குள்ளேயே வீசி சென்றுள்ளனர். இது, திருடர்களின் செயலா என்ற சந்தேகம் உள்ளது. காரணம், இரவு இங்குள்ள மங்கள விநாயகர் கோவிலில் இருந்த மின் மோட்டார், டேபிள் ஆகியவை திருடு போயின' என்றனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Jul-2025