உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஐ.டி.,க்கு புதிய இயக்குனர்

ஐ.ஐ.டி.,க்கு புதிய இயக்குனர்

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி பொறுப்பேற்றார். சர்மா தலைமையிலான தேர்வுக் குழு, ராமமூர்த்தியை தேர்வு செய்தது. இதற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டார். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனராக இருந்த ஆனந்த், கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ராமமூர்த்தி புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் ராமமூர்த்தி, சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர். இங்கு, 1980ல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறையில் பி.டெக்., பட்டம் பெற்றார். பின், அமெரிக்காவில் <உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., பட்டங்களை பெற்றார். சிறிது காலம் அமெரிக்காவில் பணிபுரிந்த அவர், 1986ல் சென்னை திரும்பி, ஐ.ஐ.டி.,யில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஐ.ஐ.டி.,யில் திட்ட முதல்வராக பணிபுரிந்து வந்தார். இவர், மொபைல் போன் மற்றும் ஒயர்லெஸ் தகவல் தொடர்பு சம்பந்தமாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ