உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதி: மணற்கேணி இணையதளம் துவக்கம்

பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதி: மணற்கேணி இணையதளம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான, மணற்கேணி இணையதளத்தை, அமைச்சர் மகேஷ் நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.இந்த இணையதளத்தில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, வீடியோ வடிவிலான விளக்கங்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் அளித்துள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான, அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில், முதற்கட்டமாக பாடப் பொருள்கள், வீடியோவாக தரப்பட்டுள்ளன ஒவ்வொரு வீடியோ முடிவிலும், வினாடி - வினா வாயிலாக, மாணவர்களின் புரிதல் திறனை சரி பார்க்கும் வசதி உள்ளது. இதன் வழியே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நடத்திய பாடம், முறையாக புரிந்திருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ள முடியும் முதல் கேள்வி எளிமையாக துவங்கி, படிப்படியாக விடை அளித்துக் கொண்டே வருகையில், கேள்விகளின் கடினத்தன்மை கூடிக் கொண்டே வரும்.ஒவ்வொரு கேள்விக்குமான விரிவான விடைகளும் உள்ளன. ஏதேனும் ஓரிடத்தில் மாணவர்களுக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருந்தால், ஆங்காங்கே அவர்களுக்கான உதவி குறிப்புகளும் உண்டு வீடியோக்கள், '2டி, 3டி' அனிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கற்போர் உடனடியாக புரிந்து கொள்வதற்கும், புரிந்து கொண்டவற்றை, நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளவும் உகந்தவை. அனைத்து வீடியோக்களையும், கேள்விகளையும் கடவுச்சொல் இன்றி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதன் இணையதள முகவரி, https://manarkeni.tnschools.gov.in. மணற்கேணி மொபைல் செயலியை, பிளே ஸ்டோரில், 'TNSED Manarkeni' என, உள்ளீடு செய்து தேட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

duruvasar
பிப் 23, 2024 15:39

மணல் இருந்தால்தானே ஐயா கேணியில் ஊற்று வரும் . அன்பிலுக்கு கரையோரமும் , அக்கரையுமே இதற்க்கு சாட்சி.


Mani . V
பிப் 23, 2024 15:14

உருட்டு எண்: 9713.


கஜேந்திரன்
பிப் 23, 2024 12:26

பாத்துங்க... மணற்கேணி மணலை மணல் மாஃபியா வந்து ஆட்டையப் போட்டுறப் போகுது.


V GOPALAN
பிப் 23, 2024 10:59

Dear Mahesji. What is percentage of pass in Tamil Language in Govt Schools. Even fifth class student is unable to write Tamil Alphabets fastly


karunamoorthi Karuna
பிப் 23, 2024 08:28

பாலை நிலத்தில் தான் மணற்கேணி இருக்கும்


ராஜா
பிப் 23, 2024 08:20

முதலில் அந்த குழந்தைகளுக்கு ஒழுங்கான கழிப்பறை வசதி செய்து குடுங்க...


அப்புசாமி
பிப் 23, 2024 16:50

அது வேற கேணி. அதுக்கு வேற டிபார்ட்மெண்ட் இருக்கு.


Raj
பிப் 23, 2024 07:58

அடுத்த பைசா அடிப்பதற்கு பிளான் பண்ணிட்டானுங்க மாணவர்கள் என்ற பெயரில்....


அப்புசாமி
பிப் 23, 2024 07:36

அத் என்ன manarkeni ந்னு இங்கிலீஷில் தேடணுமா? இவிங்களும் இவங்க தமிழும்.


Ramesh Sargam
பிப் 23, 2024 06:49

இந்த அமைச்சர் மகேஷ் இருக்கார் பாருங்க, இவர் அந்த உதவா நிதியின் right and left hand ஆக வலம்வரும் ஒரு அமைச்சர். ஏன் அப்படி வலம்வருகிறார்? நாளை, ஒருவேளை அந்த உதவா நிதி முதலமைச்சர் ஆனால், தனக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்கிற பகல் கனவில் அந்த உதவா நிதியின் right and left hand ஆக வலம்வருகிறார்.


நரேந்திர பாரதி
பிப் 23, 2024 03:50

"பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதி: மணற்கேணி இணையதளம் துவக்கம்"...வெறும் மணற்கேணின்னு சொன்னா எப்படி? அதுக்கும் அய்யா பெயரை வைக்க தோணலையோ??


Ramesh Sargam
பிப் 23, 2024 06:36

வெச்சிட்டாப்போச்சு...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை