உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  55,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

 55,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

சென்னை : 'ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ள நிலையில், புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், எங்களுக்கு விரைவாக கார்டு வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழகத்தில் மகளிருக்கு வழங்கப்படும், மாதம், 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற, பலர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர். தனி சமையல் அறையுடன் கூடிய முகவரி சான்று, திருமணப் பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவருக்கு, ஒரு மாதத்திற்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், விண்ணப்பம் செய்த பலருக்கு, கார்டு வழங்கப்படாமல் தாமதம் செய்யப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு, 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே, கார்டை விரைவாக வழங்க வேண்டும் என, அரசுக்கு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய ரேஷன் கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில், 1.07 லட்சம் விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 'தகுதியான 55,000 பேருக்கு, ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்; மற்றவர்களுக்கு இம்மாத இறுதிக்குள், கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
டிச 09, 2025 15:26

ரூபாய் 5000 கொடுப்பது இனாம். இனாம் எவர் பெற தகுதியுள்ளவர்கள்? ஏழை எளியவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இப்படிப்பட்டவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.வசதி உள்ளவர்கள் பெற்றால் கேவலம். தன்மானத்தை அடகுவைத்தவர்கள். இனாம் கொடுக்கும் அரசு கடன் இல்லாத நிலையில் இருக்கவேண்டும் தமிழக அரசு உபரி நிலையில் இருப்பதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட அரசிடம் இருந்து இனாம் பெறுவது சரிதானா அப்படி பெற்றால் அது தர்மத்திற்கு உட்பட்டது அல்ல. முக்கியமாய் தாய்மார்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். குல நாசம் ஓன்று உள்ளது என்பதனை மறக்கக்கூடாது


Krishna
டிச 09, 2025 09:02

Issue Online Freely After Online Checking of Duplicate RationCards. Things can be Issued After Online Verification of ModiMentalAadhar-SpyMaster No Without UnWanted Fingerprints. ABOLISH 90% UNWANTED FREEBIES& RationItems


சமீபத்திய செய்தி