உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவசியமான இடங்களில் புதிய ரேஷன் கடைகள்

அவசியமான இடங்களில் புதிய ரேஷன் கடைகள்

சென்னை, : சென்னை எழிலகத்தில், உணவு வழங்கல் துறை செயல்பாடுகள் தொடர்பாக, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். துறை செயலர் சத்யபிரத சாஹு, உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழக உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, தகுதியான நபர்களுக்கு கார்டு வழங்குமாறு, அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சிரமமின்றி பொருட்கள் வாங்க வசதியாக, அவசியம் உள்ள இடங்களில் புதிய மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளை திறக்குமாறும் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை