உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் புதிய டுவிஸ்ட்: சிக்கலில் நயினார் நாகேந்திரன்

ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் புதிய டுவிஸ்ட்: சிக்கலில் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை தாம்பரத்தில் ரயிலில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள், பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், அவருக்கான எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர் நயினார் நாகேந்திரன். இவர் தற்போது திருநெல்வேலி எம்எல்ஏ.,வாகவும் உள்ளார். தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை எடுத்து வந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k14ftbfm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தமிழக பா.ஜ., துணைத்தலைவரும், திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம், தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றதாகவும் அவர்கள் கூறினர். இதனால் நயினார் நாகேந்திரன் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி.,க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் பணத்துடன் கைதானவர்கள் நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், எம்எல்ஏ.,வுக்கான எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் ரயிலில் பயணித்தது தெரியவந்துள்ளது. இது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

rama adhavan
மே 15, 2024 04:26

இந்த சாட்சியம் நீதிமன்றத்தில் நிற்காது இந்த கேசும் நிற்காது


MADHAVAN
மே 14, 2024 10:39

பிஜேபி ல ஊழல் செய்தால் தவறவில்லை, ஜெய்ஸ்ரீராம் நாங்கள் முட்டுகுடுப்போம்


Selvarajan
மே 15, 2024 01:42

ரொம்ப சரி


MADHAVAN
மே 14, 2024 10:32

பிஜேபிக்காரனுங்க கொள்ளையடித்தால் அது குத்தமில்லை, ஜெய்ஸ்ரீராம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 14, 2024 09:10

அதே உலகமகா தேர்தல் பத்திரம் ஊழலில் திமுக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பணம் பெற்றுள்ளது அதிலும் ஒரு விஷேசம் லாட்டரி சீட்டே இல்லா தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் உலகமகா தேர்தல் பத்திரம் மூலம் ஆளும் திமுகவிற்கு பணம் கொடுத்து உள்ளார்கள் எதற்காக?


enkeyem
மே 13, 2024 19:50

ஏன்? ஊழியர்கள் என்றால் உயர் வகுப்பில் பயணிக்கக்கூடாதா என்ன? ஓஹோ உங்க திராவிட மாடலில் ஊழியர்களை கீழ்த்தரமாக தானே நடத்துவீர்கள்


ஆதிகேசவலு
மே 13, 2024 19:00

200 கோடில பாக்கி 196 கோடி எங்கே ஜீ?


Srinivasan Krishnamoorthi
மே 13, 2024 17:16

EQ என்பது அவசர வேலை விஷயமாக பயணம் செய்ய யாருக்கு வேண்டுமானாலும் பரிந்துரைகள் செய்வது MP MLA CHIEF SECRETARY இவர்களின் வழக்கமாய் உள்ளதால் இந்த காரணம் எல்லாம் ஒரு EQ பரிந்துரைத்தவருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது


Muralidharan S
மே 13, 2024 17:05

இனிமேலாவது திராவிஷ கட்சிகளில் இருந்து வருபவர்களை "பார்த்து / ஆராய்ந்து " பிஜேபி க்குள் சேர்ப்பது பீஜேபியின் எதிர்காலத்திற்கு நல்லது


J.V. Iyer
மே 13, 2024 16:37

பொய்களை சொல்லி பாஜகவினரை சிறையில் அடைப்பதே இந்த மாடல் அரசின் சாதனை


Balaji
மே 13, 2024 16:26

தனது ஓட்டலில் பணி செய்பவர்கள் என்பதால் இவருடைய உதவியாளர் அந்த டிக்கெட் பரிந்துரை செய்திருக்கலாம்


ஜெய்ஹிந்த்புரம்
மே 13, 2024 17:33

ஆமால்லே, ஊழியருக்காக முதல் வகுப்பு / ஏசி டிக்கெட் எம்புட்டு நல்லவரு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை