உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

வெள்ளத்தில் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு அரசிடம் இருந்து நிவாரணம் கிடைக்காததால், பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, வெள்ளத்தில் பாதிக்கப்படும் போது நிவாரணம் கிடைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களையும் சேர்க்கும்படி, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை வளர்ப்புக்கு 7 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதை, குறித்த காலத்தில் திரும்பச் செலுத்தினால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படும். நடப்பு நிதியாண்டில், 2,500 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், ஏப்ரல் முதல் நவம்பர் வரை எட்டு மாதங்களிலேயே, 3.10 லட்சம் பேருக்கு, 1,870 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.சவுதி அரேபிய அமைச்சகத்தில், மருத்துவ பணிக்கு, அலோபதி மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். முதுகலை பட்டம் பெற்ற, அலோபதி மருத்துவர்கள், 55 வயதிற்கு மிகாமல், 3 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரங்கள், www.omcmanpower.tn.gov.inஇணையதளத்தில் உள்ளன என, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை