உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்

காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்

ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர், அர்ஜுன் சம்பத்: லோக்சபா தேர்தலில் மோடியின் வேட்பாளருக்கு, எங்கள் ஆதரவு இருக்கும். காங்., இல்லாத பாரதம், கழகங்கள் இல்லா தமிழகம் உருவாக வேண்டும். தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் நாம் தமிழர் என, நான்கு முனை போட்டி வர போகிறது. இதில், 40 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.டவுட் தனபாலு: இது என்ன மாதிரியான கணக்குன்னு புரியலையே... இதே மாதிரி, 2016 சட்டசபை தேர்தலில் நான்கு முனை தேர்தல் நடந்தப்ப, அ.தி.மு.க., ஈசியா ஆட்சியை தக்க வைத்தது... அதே மாதிரி இப்பவும், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பல கட்சிகளுக்கும் சிதறி, 40 தொகுதிகளையும், தி.மு.க., கூட்டணி அள்ளிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: கோவை மாநகராட்சியில், தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளான, காங்., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் மற்றும் ம.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, பொங்கல் பரிசுத் தொகை அடங்கிய, 'கவர்' வழங்கியுள்ளார். அதில், 1 லட்சம் ரூபாய் இருந்தது.டவுட் தனபாலு: தீபாவளிக்கு சொந்த கட்சி கவுன்சிலர்களை கவனிச்சிட்டு, பொங்கலுக்கு மட்டும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மீது அமைச்சருக்கு பாசம் பொங்குதே... இந்த, கவர் கொடுக்கிற வேலை எல்லாம், லோக்சபா தேர்தலுக்கு அவங்களை, 'கவர்' பண்ண தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: பா.ஜ., கூட்டணியை விட்டு, அ.தி.மு.க., ஏன் வெளியே வந்தது என்பது குறித்து, எங்கள் பொதுச்செயலர் பலமுறை தெரிவித்து விட்டார். தமிழகத்தின், 234 தொகுதிகளிலும், எல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் இதை சொல்லி விட்டோம். அதன் பிறகும் யாருக்கும் சந்தேகம் இருந்தால், ஓட்டு எண்ணும் போது தான், எந்த கட்சி, எங்கு உள்ளது என்பது குறித்து தெரிய வரும்.டவுட் தனபாலு: சிறுபான்மை யினர் ஓட்டுகளை அள்ள தானே, பா.ஜ., கூட்டணிக்கு முழுக்கு போட்டீங்க... அதை கெடுக்கிற மாதிரி ஆளுங்கட்சி யும், பா.ஜ.,வும் செயல்படுறதால, நீங்க எதிர்பார்த்த மாதிரி சிறுபான்மையினர் ஓட்டுகளை லோக்சபா தேர்தலில் அறுவடை செய்ய முடியுமா என்பது, 'டவுட்' தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

vaiko
ஜன 15, 2024 22:00

அர்ஜுன் சம்பத்தின் ஆதரவோடு நாற்பது தொகுதிகளிலும் பீ ஜெ பி வெற்றி பெற்று, அண்ணாமலை அவர்கள் முதல்வராக பதவி ஏற்பார்.


duruvasar
ஜன 15, 2024 14:09

ஒரு அன்பர் தன் சொந்த கட்சிகாரங்க மூளை இல்லாதவர்கள் என கூறுவதை நம்ப முடியவில்லை


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 15, 2024 12:38

மூளை இல்லாத மனிதர்கள் இருந்தால் நடக்கும்


M.Selvam
ஜன 15, 2024 11:04

ஆமா அது போலவே மதமும் மதவெறி ஜாதி ஜாதி வெறி இவை இல்லாத அவற்றுக்கு கும்பல் சேர்க்கும் அமைப்புக்கள் இல்லா தமிழகம்,இந்தியா வராதா அனைத்து மக்களின் ஆசை.. ஏக்கம்...


தஞ்சை மன்னர்
ஜன 15, 2024 10:35

""" லோக்சபா தேர்தலில் மோடியின் வேட்பாளருக்கு, எங்கள் ஆதரவு இருக்கும் "" யாரு யாரு நீயும் உண்குடுபமும உன்குடும்பம் கூட உன்னை மதிப்பதில்லை என்று கேள்விபட்டேன் உண்மையா


Kanagaraj M
ஜன 15, 2024 09:11

பொய் வரலாற்றை திணித்து வாழ்வதை விட சவாதே மேல் என்ற வாசகம் சொன்னவரையும் அதை கேட்டு நடப்பவரையும் கேளுங்கள், அது சாத்தியம் என்று.


THAMIRAMUM PAYANPADUM
ஜன 15, 2024 08:59

ஹிந்துக்கள் இந்தியாவில் இருக்கும் வரை காங்கிரெஸ்ஸையும் க்லஸ்ல்கதையும் ஒழிக்க முடியாது என்பது ...


THAMIRAMUM PAYANPADUM
ஜன 15, 2024 08:48

ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர், அர்ஜுன் சம்பத்: லோக்சபா தேர்தலில் மோடியின் வேட்பாளருக்கு, எங்கள் ஆ... எப்படி ஹிந்து மதம் தாய்லாந்து மலேசிய சிங்கப்பூர் பர்மா வியட்நாம் லாவோஸ் இல் மறைந்தது போலவே


அப்புசாமி
ஜன 15, 2024 07:34

நாப்பதுக்கும் ஆசைதான். ஆசை நல்ல தோசைதான்...


அப்புசாமி
ஜன 15, 2024 07:33

இவர் பாவம். ஒரு வார்டு சீட் கூட இல்லாம ஸ்டேட்மெண்ட் மட்டும்.குடுத்துக்கிட்டே இருக்காரு.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி