உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் சரக்கில் கிக்கில்லை: அமைச்சரின் "சாராய சப்போர்ட்" பேச்சு

டாஸ்மாக் சரக்கில் கிக்கில்லை: அமைச்சரின் "சாராய சப்போர்ட்" பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை. கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர் ' என அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் பேசுகையில் குறிப்பிட்டார்.மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: உழைப்பவர்களின் அசதியை போக்க, அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை. கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு சாப்ட் ட்ரிங்க் போல மாறிவிடுகிறது. விட்டில் பூச்சி விளக்கில் விழுவது போல கள்ளச்சாரயத்தை நோக்கி சிலர் செல்கின்றனர். கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால், இதனை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகக்கூடிய அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேண்டாமா. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

S.jayaram
ஜூலை 02, 2024 22:01

அதாவது அவருடைய தலைவர் ஆட்சியில் அப்படித்தான் இருக்கும் பிறகு எதற்கு டாஸ்மாக் மூடி விட வேண்டியது தானே இதையே வாங்கி விற்கலாமே அவர்களுக்கு மனித உயிர்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல துட்டு ஒன்றுதான் குறிக்கோள்


Ramesh Sargam
ஜூலை 01, 2024 18:16

நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அப்படி என்றால் சாவு உன் வீட்டில் நடந்திருந்தால் நீ இப்படி பேசுவாயா?


sankaranarayanan
ஜூன் 30, 2024 00:01

கிக்குக்காக வக்கு எடுத்து பேசும் துக்கு முகனே சரக்கில் கிக்கு இல்லை என்ற சாக்கில் சொக்கிவிடக்கூடாது பக்கு பக்கு என்று செய்த தவறுக்கு மனம் அடித்துக்கொண்டாலும் மக்குத்தனமான காரியங்களை இனி செய்யக்கூடாது லக்கு இருப்பவன் பொழைச்சுப்பான் இல்லாதவன் லொக்கு லொக்கு என்று இருமியே சாவான் இதுதான் காப்பவனின் கட்டளை


subramanian
ஜூன் 30, 2024 14:48

எதுகை மோனை நன்று.


Sivasankaran Kannan
ஜூன் 29, 2024 23:58

தமிழ் நாட்டு குடிகார கூட்டம் மீண்டும் மீண்டும் இந்த சாக்கடை மாடல் க்கு ஓட்டு போட்டு குட்டி சுவராவது தலைவிதி.. சாராய பாக்கெட்டுக்கும், பிரியாணிக்கும், 1000 ரூபாய்களுக்கு ஓட்டை விற்று, கொத்து கொத்தாக சாராயம், கஞ்சா மற்றும் போதையில் சுடுகாட்டுக்கு செல்லும் கூட்டம்..


sankaranarayanan
ஜூன் 29, 2024 21:16

வேறு எதுவும் உற்பத்தி செய்யாமல் கிக்கும் புக்கும் உள்ள மது பாணத்தையே தயாரிக்க இந்த அரசு முன் வரலாமே


புலவர் புகழரசன்
ஜூன் 29, 2024 20:30

ஆவின் பாலில் திக் இல்லை. டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை. இதை சரி செய்ய வக்கில்லை. தமிழக தத்தி மக்களுக்கு லக் இல்லை.


premprakash
ஜூன் 29, 2024 23:42

ஹா ஹா ஹா


krishna
ஜூன் 30, 2024 03:57

SUPER SIR.KALAKKITINGA.TR STYLE FANTASTIC BUT TRUE COMMENT.


M Ramachandran
ஜூன் 29, 2024 19:38

ஒரு மூத்த அமைச்சர் இப்படியா பேசுவது


hari
ஜூன் 29, 2024 19:22

இவர்களுக்கு ஓட்டு போட்ட தமிழர்கள் வாழ்க


M Ramachandran
ஜூன் 29, 2024 19:10

இப்படி மூத்த அமைச்சர் ஒருவர் பொறுப்பற்ற தனமாகா பேசுவது ஏற்புடையதாநா என்று சிந்தித்து பாருங்கள்.


SIVA
ஜூன் 29, 2024 19:08

டுப்லிகேட் சரக்கு என்று சொல்லாமல் சொல்கின்றார் , இவருக்கு யாரு மேல என்ன கோபமோ , பி டீஆர் 2.0 , எப்படியோ அந்த கட்சில தகராறு வந்தா சரி ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை