உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி

அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.திருச்சி திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி மணமக்களை வாழ்த்தி பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=239p7dav&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது உதயநிதி பேசியதாவது: மணமகன் அப்பா சொல்கிற பேச்சையும் கேட்பதில்லை. அம்மா சொல்கிற பேச்சையும் கேட்பதில்லை. தாலி கட்டும் போது அவர்கள் அம்மா சொல்கிறார். நான் பக்கத்தில் தான் இருக்கிறேன். இரண்டு முடிச்சு தான் போட வேண்டும் என்று சொல்கிறார்கள். மணமகனும் காதில் கேட்காத மாதிரி மூன்று முடிச்சு போட்டு விட்டார். அப்புறம்தான் தெரிகிறது மணமகள் நீங்கள் தான் மூன்று முடிச்சு போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இப்பொழுதே அவர் நன்றாக மனைவி என்ன சொல்கிறாரோ, அதை தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஒரே அடியாக மனைவி சொல்வதை மட்டும் கேட்டு நடக்காமல், அதே நேரத்தில் அப்பா அம்மாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடக்க வேண்டும்.

அப்பா- மகன் உறவு

அரசியலில் அப்பா- பையன் (மகன்) உறவு மிக மிக முக்கியம். அப்பா பேச்சை கேட்காத பையன் என்று சொல்லி விடக்கூடாது. அந்தப் பிரச்னை எனக்கும் இருக்கிறது. மணமகனுக்கும் இருக்கிறது. இவ்வாறு உதயநிதி பேசினார். அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் என்பதை உதயநிதி வெளிப்படையாக ஒப்புக்கொண்டது அரசியல் களத்தில் பேசும் பொருளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.MURALIKRISHNAN
ஜூலை 14, 2025 23:20

இவருக்கு கமலே பரவாயில்லை. ஒரு எழவும் புரியல.


panneer selvam
ஜூலை 14, 2025 22:22

It is correct statement but applicable to dump son , he should follow his father for survival


A P
ஜூலை 14, 2025 21:51

சனாதனத்தில் ஊறித் திளைத்த நல்லவரான அவரின் பேச்சை மகன் கேட்காததால்தான், சாமி நம்பிக்கை இல்லாத, இந்து விரோதி கட்சி உருவானது. அப்பா பேச்சைக் கேட்காதிருப்பது என்பது அப்போதே ஆரம்பித்து விட்டிருக்கிறது. தனது தந்தையின் பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பதுவே மக்களின் நாகரீகமான செயல்.


Naga Subramanian
ஜூலை 14, 2025 21:45

இந்த பேச்சை எல்லாம் கேக்கனும்ம்னு நம் தலையெழுத்து. நல்ல செய்திகள் பலவிருக்க, "கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று" என்ற திருக்குறள் விகுதியைப் போன்றுள்ளது


Ramesh Sargam
ஜூலை 14, 2025 19:46

அப்பன் ஸ்டாலினுக்கும், மகன் உதயநிதிக்கும் ஏதோ பிரச்சினை என்று தெரிகிறது.


Balaa
ஜூலை 14, 2025 19:21

இவர் உளறல் தாங்கமுடியவில்லை. இவரெல்லாம் நம்மள ஆள்கிறார் என்பது தான் கொடுமை.


Kjp
ஜூலை 14, 2025 19:20

அப்பா பேச்சை கேட்க வில்லை என்று தானே அழகிரியை உங்கள் தாத்தா திமுகவிலிருந்து நீக்கினார்.ஞாபகம்இருக்கிறதா? உங்கள் அண்ணன் முத்து அப்பா பேச்சை கேட்காமல் அதிமுகவில் இணைந்தார் என்பது ஞாபகம் இருக்கிறதா?


spr
ஜூலை 14, 2025 17:54

"அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்" என்பதை உதயநிதி வெளிப்படையாகச் சொன்னது பாமக குடும்ப அரசியல் குறித்த ஒன்றே இவரும் கலைஞர் போலப் "பொடி" வைத்துப் பேசத் தொடங்கி விட்டார்


tamilvanan
ஜூலை 14, 2025 17:50

பெரியப்பா அழகிரி கருணாநிதியின் பேச்சை கேட்டாரா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை