உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை; கிராம கோவில் பூஜாரிகள் முடிவு

தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை; கிராம கோவில் பூஜாரிகள் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : ''லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவில்லை,'' என பல்லடம் கிராம கோவில் பூஜாரிகள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிராம கோவில் பூஜாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. நடராஜன், தங்கவேல் முன்னிலை வகித்தனர். பல்லடம் பகுதி கிராம கோவில் பூஜாரிகள் பங்கேற்றனர்.இதில், கோவில்களில் பூஜை செய்து வரும் பூஜாரிகளுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலங்களை பறிமுதல் செய்யும் அறநிலையத் துறையின் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மன்னராட்சி காலம் முதல், கிராம கோவில்களில் பூஜை செய்து வருவோருக்கு 1863ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு இனாம் நிலம் வழங்கியது. அதில் விவசாயம் செய்து அந்த வருமானத்தை கொண்டு பிழைத்து வருகிறோம்.இந்த நிலங்களை குறி வைத்து அறநிலையத் துறை அவற்றை பறிமுதல் செய்து வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி, எங்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதற்கு துணையாக உள்ள தி.மு.க., அரசுக்கு, வரும் தேர்தலில் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

K.Ramakrishnan
பிப் 19, 2024 18:39

பூசாரிகளுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் இனாமாக கொடுத்த நிலமா? ஆதாரம இருக்கிறதா? கோவில் நிலத்தை சுருட்டுகிற பூசாரிகளிடம் இருந்து மீட்பது தவறா? ஆண்டாண்டு காலமாக நான்கு தலைமுறைகளாக அனுபவித்து வந்ததை விட மனது வருமா?


Karuthu kirukkan
பிப் 19, 2024 07:33

நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது, ஜக்கம்மா சொல்ற, நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது, கிராமங்களை காக்கும் குல தெய்வங்கள் அந்த பூசாரிகளையும் காக்கட்டும்


Sivakumar
பிப் 18, 2024 20:56

TN Government appointed HR


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 18, 2024 19:49

கர்த்தரின் சீடர் விடியல் வாளுக .......


J.V. Iyer
பிப் 18, 2024 19:19

அது மட்டும் பத்தாது. கோவிலுக்கு வருபவர்களிடம் இந்த கொள்ளைக்கூட்டத்திற்கு வோட்டு போடமாட்டோம் என்று சத்தியம் வாங்குங்கள். ஒரு நூறு, ஆயிரம் ஹிந்துக்களை பாஜகவுக்கு ஓட்டுப்போட துணை செய்யுங்கள்.


ramesh
பிப் 18, 2024 19:09

என்ன தான் பிஜேபி ஆதரவாளர்கள் குதி குதி என்று இங்கே குதித்தாலும் பிஜேபி க்கு கிடைக்கபோவது பூஜ்யம் தான்


duruvasar
பிப் 18, 2024 15:33

இப்படி ஒவ்வொரு வாக்காளர்களும் உறுதிமொழி எடுக்கவேண்டும்


Devan
பிப் 18, 2024 14:55

சரியான தீர்மானம். இதனால் பாதிக்கபட்டவர்களுக்கு தான் வலி தெரியும் ஆக்கிரமிப்பிற்கும் உபயோகப்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாத அநீதித் துறை. கட்சிக்காரன் நிலத்தை விற்று பணமாக்குவதை தடுக்க முடியாமல் ஏழைகள் வயிற்றில் அடிக்கிறது.


raja
பிப் 18, 2024 13:51

ஓஹோ இவங்க கிட்ட இருந்து புடிங்கிதான் ஆக்கிரிமிப்பு நிலங்களை மீட்டோமுண்ணு சொல்லரானா திருட்டு திராவிடன் ...அப்போ உண்மையான ஆக்கிரிமிப்பு நிலத்தை மீட்கல....


Raja
பிப் 18, 2024 11:29

இதெல்லாம் செய்து இந்து மதத்தை வீழ்த்தி விடலாம் என நினைப்பவன் மதமாரி மூடன்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ