UPDATED : பிப் 15, 2024 03:14 PM | ADDED : பிப் 15, 2024 11:54 AM
சென்னை: பெண்கள் உரிமை திட்டத்தால் பலர் பயனடைந்து வருகின்றனர் . மேலும் மக்களுக்கு நன்மை தரும் பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி அரசு சாதனை படைத்து வருவதாக தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் வழியில் இயங்குவதால் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஒருகாலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என நாமே முழங்கினோம். ஆனால் இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கே வாரி வழங்குகிறது. ஈ.வெ.ரா, அண்ணாதுரையின் வாரிசாக எப்படி செயல்படவேண்டுமோ அப்படி செயல்படுகிறேன். கருணாநிதி இருந்திருந்தால் திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு மகிழ்ந்திருப்பார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yzojy3xs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 12ம் தேதி கவர்னர் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் துவங்கியிருக்க வேண்டும். ஆண்டின் துவக்கத்தில் கவர்னர் உரையுடன் துவங்க வேண்டும் என்பது சட்டசபையின் மரபு. ஆனால் கவர்னர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த அவையை பயன்படுத்தும் வகையில் நடந்துகொண்டார். இது நூற்றாண்டு கொண்ட சட்டசபையை அவமானப்படுத்தும் செயல்.சாதனை
ஆட்சி பொறுப்பேற்ற 33 மாதங்கள் முன்னேற்றமான, சாதனை மாதங்களாகும். தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களில் 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது. பிற மாநிலங்களிலும் தமிழக திட்டங்களை செயல்படுத்துவதே திராவிட மாடல் அரசின் சாதனை. மக்களுக்கு நன்மை தரும் 10 விதமான சாதனைகளை படைத்துள்ளோம். இதனை பிறர் பொறாமையாக பார்ப்பது மெகா சாதனை ஆகும். மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை பற்றி சட்டசபையில் விமர்சிக்க விரும்பவில்லை.எதிர்க்கட்சிகள்
மதுரை எய்ம்ஸ் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை மத்திய அரசு வழங்குவதில்லை. மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு இதுவரை மத்திய அரசு நிதி வழங்கவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்துபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள், இப்போதாவது பேசுகிறார்கள் என்ற ஆறுதல் தருகிறது. எதிர்க்கட்சியினர் எங்களுடன் இணைந்து மத்திய அரசு நிதி தர குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.