உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மற்றவர்கள் வெற்றி பெற்றால் சாதாரண நிகழ்வு; நாங்கள் வெற்றி பெற்றால் சரித்திரம்: சீமான்

மற்றவர்கள் வெற்றி பெற்றால் சாதாரண நிகழ்வு; நாங்கள் வெற்றி பெற்றால் சரித்திரம்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ‛‛ தேர்தலில் வெற்றி பெற்றால் அது சாதாரண நிகழ்வு. நாம் தமிழர் கட்சியின் வெற்றி சரித்திரம்'' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.திருநெல்வேலியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, ஆலங்குளத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. ஒற்றைக் கட்சி ஆட்சி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டனர்.அதிகார பரவலாக்கம் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், அது ஒரு சாதாரண நிகழ்வு. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அது சரித்திரம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி மலர நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும். ஹிந்தி அறிந்தவர்கள் மட்டும் பிரதமர் ஆகவும், அமைச்சர் ஆகவும் இருந்து நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வது ஜனநாயக விரோதம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

K.Ramakrishnan
மார் 29, 2024 22:28

நீங்கள்சரித்திரம் படைத்தால் சரி


surya krishna
மார் 29, 2024 17:04

நீங்க ஜெயிச்சா சரித்திரம் இல்ல தரித்திரம்.


என்றும் இந்தியன்
மார் 29, 2024 17:28

% சரி


என்றும் இந்தியன்
மார் 29, 2024 17:28

% சரியான வார்த்தை


Lion Drsekar
மார் 29, 2024 17:02

எது எப்படி நடந்தாலும் , எல்லாமே அவர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் வெற்றி, பாவம் வாக்காளர்கள் நிலைதான் சுதந்திரம் பெற அனைத்தையும் தியாகம் செய்த ஒருவர்கூட இன்று உலக அகராதியில் இல்லாமல் செய்த பெருமை எம்மக்கள் செய்த சாதனை, உன் பணம் என்பதும், முன்பாவது நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் நீ எனக்கு என்ன தருவாய், நீ என் வீட்டுக்கு வந்தால் எனக்கு என்ன கொண்டு வருவாரு என்று வாழ்ந்த காலம் மலையேறிப்போனது இன்று எல்லாமே தலைகீழ் "என் பணம் நம் பணம்" இதுதான் நிகழ்காலம் வந்தே மாதரம்


Palanisamy Sekar
மார் 29, 2024 16:36

சீமான் சும்மாவே இருக்க மாட்டார் போலும் எப்போது பார்த்தாலும் மொழி பிரச்சினையை பேசுவார் அல்லது கூட்டாட்சி தத்துவம் என்பார் அதாவது இவருக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கணுமாம் தடை செய்யப்பட இயக்கத்தின் பிரதிநி போலவே ஆக்ட் பன்றார் மேடையில் உளறல் கொஞ்ச நஞ்சமல்ல ஏதாவது சொல்லி கைதட்டல் வாங்கியதும் தலைகால் புரிவதில்லை உதாரணத்துக்கு மீனவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து அனுப்புவாராம் அவர்களும் இலங்கை மீனவர்களை சுட்டுட்டு வா நான் பார்த்துக்கிறேன் ன்னு சொல்வாராம் இது நடைமுறை சாத்தியப்படுமா என்ன? இதற்கும் அங்கே குழுமி இருக்கும் சிலரின் விசிலும் கைதட்டலும் கேட்டு அதிபர் போலவே சீமான் தன்னை நினைத்துக்கொள்வார் எந்த விஷயத்தில் இவர் மாட்டிக்கொள்ள போகிறாரோ தெரியல நல்லதுக்கில்லை சீமான் வாய்க்கு அதிலிருந்து வருகின்ற வார்த்தைக்கும்


theruvasagan
மார் 29, 2024 16:36

நீங்கள் வெற்றி பெற்றால் சரித்திரமா.


Ayen
மார் 29, 2024 16:33

சீமானின் சில கொள்கைகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம். மற்றவை 75% இன்றைய நடைமுறைக்கு ஏற்றது அல்ல. பிரபாகரனை வைத்து அரசியல் ஏற்றுக் கொள்ள முடியாது, ஈழத்து தமிழர்களுக்கு அவர் தலைவனே ஆனால் தமிழகத்துக்கு அவர் தலைவர் கிடையாது ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நமது அப்பாவி இளைஞர்களுக்கு நமது வரலாறு, நம்மை ஆண்ட பழம் தலைவர்கள், விடுதலை வீரர்கள் இவர்களது வரலாற்றை கூறி அரசியலுக்கு இளைஞர்களை அழைத்து வந்திருந்தால் தமிழகம் உன்னை மேம்பாடு தலைவன் என்று கூறும். இன்றைய பிரச்சனை மக்கள் தொகை அனைவருக்கும் வேலை என்பது சாத்திய மற்றது, ஆகையால் இளைஞர்களை தவறான வழியில் செல்லாமல் கடுமையாக போராடி வாழ்கையில் முன்னேற தைரியம் உள்ளவர்களுக்கும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் சமுதாயத்தை சிர் அழிக்காமல் உருவாக்க வேண்டும். இன்றைய புதிய தொழில் நுட்பம் உலக நாட்டுடன் சமமாக வளர்த்தெடுக்க தேவையானதை எப்படி செய்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர வேண்டும். மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, அன்றாட வாழ்க்கை முறை இவைகளைப் பேசுங்கள். பிரபாகரனை தல்லி வைத்தாலே நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் திரும்பும்.


aaruthirumalai
மார் 29, 2024 16:30

தரித்திரம்.


பைரவர் சம்பத் குமார்
மார் 29, 2024 16:23

1). அடுத்த சட்டசபை தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து குறைந்தது ஐந்து முதல் பத்து எம்.எல்.ஏக்களை சீமான் பெறவில்லை எனில் அதற்கு அடுத்து 2030 சமயங்களில் வரும் தேர்தல்களில் வைகோவின் நிலைதான் சீமானுக்கு. 2). போகாத ஊருக்கு வழி சொல்வதைவிட இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதை சீமான் பழக வேண்டும். 3). முப்பது இலட்சம் இளைஞர்களை அவர்களின் வயது மற்றும் அறியாமையை பயன்படுத்தி சீமான் ஏமாற்றி வருகிறார். 4). சீமானின் அட்டூழியங்களில் தூத்துக்குடி ஸ்ட்ரைலைட் ஆலையை மூட போட்ட ஆட்டங்கள் முக்கியமானவை. 5). எத்தனை குடும்பங்களை தூத்துக்குடியில் பட்டினி மற்றும் வாழ்வாதார பிரச்சனைக்கு வழிவகுத்தார். 6). சீமான் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக பேசுவது ஒருநாள் போன்று ஒருநாள் இருக்காது.


ஆரூர் ரங்
மார் 29, 2024 16:21

சரித்திரமெல்லாம் யாருக்கு வேண்டும்? சொந்த மண்ணு கேரளாவுக்கே


Kasimani Baskaran
மார் 29, 2024 15:38

பிரபாகரன் மட்டும் எழுந்து வந்தால் இந்த ஆள் இவ்வளவு அள்ளி விடுகிறாரே என்று வியந்திருப்பார்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை