உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மற்றவர்கள் வெற்றி பெற்றால் சாதாரண நிகழ்வு; நாங்கள் வெற்றி பெற்றால் சரித்திரம்: சீமான்

மற்றவர்கள் வெற்றி பெற்றால் சாதாரண நிகழ்வு; நாங்கள் வெற்றி பெற்றால் சரித்திரம்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ‛‛ தேர்தலில் வெற்றி பெற்றால் அது சாதாரண நிகழ்வு. நாம் தமிழர் கட்சியின் வெற்றி சரித்திரம்'' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.திருநெல்வேலியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, ஆலங்குளத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. ஒற்றைக் கட்சி ஆட்சி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டனர்.அதிகார பரவலாக்கம் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், அது ஒரு சாதாரண நிகழ்வு. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அது சரித்திரம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி மலர நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும். ஹிந்தி அறிந்தவர்கள் மட்டும் பிரதமர் ஆகவும், அமைச்சர் ஆகவும் இருந்து நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வது ஜனநாயக விரோதம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்புசாமி
மார் 30, 2024 07:25

இவர் எவ்வளவோ தேவலை.


NACHI
மார் 29, 2024 22:55

நடக்காத காரியம் .....Waste of time. ....turtle


panneer selvam
மார் 29, 2024 21:44

We do not want to re-write the history


Sck
மார் 29, 2024 20:45

மற்றவர்கள் வெற்றி பெற்றால் சாதாரண நிகழ்வுதான், ஆனால் நாம் டம்பளர் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் தரித்திரம்,சரித்திரம் இல்லை.


Manoranjith M
மார் 29, 2024 19:18

Sarithiram thaan


Mohan M
மார் 30, 2024 01:50

இரண்டு கட்சியிலும் அமலக்கத்துதை சோதனை நடத்தியுள்ளது.. எந்த நேரமும் விசாரணை வரலாம். ஆகவே சீமானை aatharikkalaam


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ