மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
4 hour(s) ago | 2
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி
5 hour(s) ago | 1
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
5 hour(s) ago | 2
ஊட்டி:ஊட்டியில் வீடு கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி மரவியல் பூங்கா எதிரே உள்ள பாபுசா லைன் பகுதியில் பெட்டிக்கடை உரிமையாளர் மேத்யூஸ் என்பவர், தனக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு மற்றும் தடுப்பு சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடந்தது. இதில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான், 20, ஜாகீர், 26, இம்தியாஸ் மற்றும் அமீர் ஆகியோர் மண்ணை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 20 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது.இதில், ரிஷ்வான் மற்றும் ஜாகீர் மண்ணில் புதைந்தனர். மற்றவர்கள் சற்று தள்ளி வேலை செய்து வந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.இதைத் தொடர்ந்து உடன் பணியாற்றியவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் நீலகிரி மாவட்ட தீயனைப்பு உதவி அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், இருவரையும் உயிருடன் மீட்டனர். அப்போது, ஜாகீர் நல்ல நிலையில் இருந்தார். ஆனால் ரிஸ்வானுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ரிஸ்வான் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், ஊட்டி அருகேயுள்ள மேல்காந்தி நகர் பகுதியில் இதேபோன்று கட்டுமான பணியின் போது, மண் சரிந்து விழுந்ததில், 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மீண்டும் ஊட்டியில் மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் நீலகிரி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கட்டுமான பணிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மண் சரிவு விபத்தை தொடர்ந்து ஊட்டி பி 1 இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, உரிமையாளர் மேத்யூஸ், 45, மேற்பார்வையாளர் நசருல்லா, 48, ஆகிய இரண்டு பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.தனி குழு: கலெக்டர் தகவல் @@மண்சரிவு ஏற்பட்டு வட மாநில தொழிலாளி உயிரிழந்த இடத்திற்கு கலெக்டர் அருணா நேரில் சென்று பார்வையிட்டார். நிருபர்களிடம் கூறியதாவது, நீலகிரியில் கட்டுமான பணிகள் நடைபெற்றால் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது மண் சரிவு ஏற்பட்ட இந்த இடத்திற்கு பொக்லைன் இயந்திரம் இயக்க அனுமதி கேட்டனர். ஆனால், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி என்பதால் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால், பணியாளர்களைக் கொண்டு வேலை நடந்துள்ளது. பணியாளர்களை கொண்டு வேலை செய்ய அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் கிடையாது. இதனால் பணியாளர்கள் மூலம் வேலை நடந்து வந்துள்ளது. ஆனாலும் இதற்கு பின், மாவட்டத்தில் எந்தவிதமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து கட்டட இன்ஜினியர்கள் மற்றும் கட்டுமான துறையில் உள்ளவர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். நீலகிரியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
4 hour(s) ago | 2
5 hour(s) ago | 1
5 hour(s) ago | 2