உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது: சொல்கிறார் சீமான்

சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது: சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது'', என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.நெல்லையில் மாஞ்சோலையில் மூடப்பட்ட தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சந்தித்த பிறகு சீமான் கூறியதாவது: அனைத்தையும் நீதிமன்றங்கள் தான் முடிவு செய்யும் என்றால் பார்லிமென்ட், சட்டசபைகள் எதற்கு?சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையாக இருக்காது. இது உலகம் முழுவதும் இருக்கிறது. சர்வாதிகாரி நேர்மையானவராக தான் இருக்க முடியும். முன்னாள் பிரதமர் நேரு மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்ட சிறந்த ஆட்சியாளர்கள் அனைவரும் அன்பான சர்வாதிகாரி ஆக இருந்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் பிரச்சனை மக்கள் பிரச்சனையா நாட்டின் பிரச்சனையா?. கட்சி விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை. நான் சர்வாதியாக இருக்கிறேன் என்றால் போய்விடு. வெளியேறுபவர்கள் வெளியேறட்டும். சர்வாதிகாரம் இல்லாத கட்சிக்கு போகட்டும்.கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகிறது. இங்குள்ள இயற்கை வளங்கள் சுரண்டி அம்மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அம்மாநிலத்தில் மலை, மணல் இல்லையா? தமிழகத்தில் இங்கு இருப்பவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள். கமிஷன் வாங்கிக் கொண்டு கையெழுத்து போடும் புரோக்கர்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

வாக்குவாதம்

நெல்லையில் கே.டி.சி. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் சீமான் - நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிர்வாகிகள் கூறுகையில், தங்களின் குறைகளைக் கூறிய போது சீமான் ஒருமையில் பேசினார் எனக்குற்றம் சாட்டினர். கூட்டத்திற்கு வந்த தங்களிடம் மொபைல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என பறித்துக் கொண்டனர் எனவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 15, 2024 10:58

காமராஜரும் நேருவும் சர்வாதிகாரிகள் என்று சீமான் குழம்பி போய் விட்டார் போல் தெரிகிறது. சர்வாதிகாரி என்றால் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்று பொருள். நேரு சர்வாதிகாரியாக இருந்திருந்தால் மொழி வாரி மாநிலங்களாக பாரத நாடு பிரிக்கப்பட்டிருக்காது. சீனா கைலாய மலையை ஆக்கிரமித்து இருக்காது. காமராஜர் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் இந்திரா காந்தி பிரதமராகவே ஆகியிருக்க முடியாது. திமுக என்று ஒரு கட்சியே இன்று இருந்திருக்காது. ஏன் சீமான் கூட கட்சியை தொடங்கி இருக்க மாட்டார். சர்வாதிகாரி அன்பாக இருந்தால் அவர் சர்வாதிகாரி என அழைக்கப்பட மாட்டார். மக்கள் தலைவர் என அழைக்கப்படுவார்.


Kasimani Baskaran
நவ 15, 2024 05:10

காமராஜர் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் திமுக என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது.


Dhurvesh
நவ 15, 2024 12:01

காமராஜரை தோற்கடித்த கட்சி DMK இதுவரை DMK வை ஒளிகிறேன் என்று சொன்ன முதற்கொண்டு தோற்றே போனார்கள்


மோகனசுந்தரம்
நவ 15, 2024 02:00

இவன் வேற எதையெதையோ உளறி வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறான்.


தாமரை மலர்கிறது
நவ 15, 2024 01:36

நீ அதிபர் நினைப்பில் உளறிக்கொண்டிருந்ததை, கைதட்டி வரவேற்று மனமுதிர்ச்சி அடையாத இளைஞர்கள் நம்பி ஏமாந்தது போதும் என்று விஜய் கட்சியில் சேர்ந்துவருகிறார்கள். இன்னும் உளறினால், இருக்கும் கொஞ்சநஞ்ச லூசுகளும் கடையை காலி செய்துவிட்டு ஓடிவிடும். சர்வாதிகாரம் வேண்டுமெனில் சீனாவிற்கு செல்.


KRISHNAN R
நவ 15, 2024 00:31

அய்யகோ இது என்ன சோதனை


Vijay D Ratnam
நவ 14, 2024 23:47

ஆணியே புடுங்க வேணாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை