உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி., கொடிக்கம்பம் அகற்ற அதிகாரிகள் ஆர்வம்

வி.சி., கொடிக்கம்பம் அகற்ற அதிகாரிகள் ஆர்வம்

அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் நிறுவுவது, கொடியேற்றுவது இந்தியா முழுதும் உள்ள ஜனநாயக மரபு. யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது என்பது, ஜனநாயக முறையை நசுக்குவதாகும். இதை ஏற்று செயல்படுவது சாத்தியமில்லாதது. அதனால், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில், நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு சில அதிகாரிகள், வி.சி., கொடிக்கம்பங்களை மட்டும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்கின்றனர். சிதம்பரம் பகுதியில் ஒரு அதிகாரி கொடிக்கம்பத்தை அகற்றும்போது அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி இருக்கிறார். இதை கண்டிக்கிறேன். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருமாவளவன், தலைவர், வி.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vijai hindu
ஜூன் 13, 2025 11:52

உன்னைய வேணாம்னு மக்கள் முடிவு பண்ணிட்டாங்க உன் கொடி வேற எதுக்கு


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 13, 2025 09:12

விசிகவை அகற்ற மக்கள் ஆர்வம் என்ற உண்மை செய்தியை பேசுங்கள் ...


SIVA
ஜூன் 13, 2025 08:32

இங்கு நடவடிக்கை வேண்டும் போது அரசு அதிகாரிகளை மட்டும் குற்றம் சொல்வாங்க, இதுவேய வேறு ஆட்சியில் நடந்தால் பாசிசம் பாயசம் ரசம் குழம்பு கூட்டு என்று வெட்டி வசனம் பேசுவார்கள், இப்படியே ஜாடை மாடையாக குறை சொன்னால் உக்கார பிளாஸ்டிக் ஷேர் தரமாட்டார்கள் ....


VENKATASUBRAMANIAN
ஜூன் 13, 2025 07:53

என்ன வேணா செய்து கொள்ளுங்கள். ஆனால் எங்களுக்கு சீட் தான் முக்கியம்.


nagendhiran
ஜூன் 13, 2025 06:28

இப்ப கூட தோழமை சுடகக்கூடாதுனு எங்க தலைவர் எப்படி பேசுரார் பாருங்க? காவல்துறைதான் காரணமாம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை