உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

பிப்ரவரி 3, 1900கரூர் மாவட்டம், குளித்தலையில் திருவேங்கடத்த அய்யங்கார் - நாமகிரி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1900ல் இதே நாளில் பிறந்தவர் டி.ஆர்.சேஷாத்ரி.இவர், திருச்சி தேசிய கல்லுாரி, சென்னை மாநிலக் கல்லுாரிகளில் படித்தார். ராமகிருஷ்ணா மிஷனில் பொருளாதார உதவியாளராக பணியாற்றினார். சென்னை பல்கலையில் வேதியியலாளர் பீமன் பிகாரி டேயுடன் இணைந்து, மருந்து துறை ஆய்வுகளில் ஈடுபட்டார்.ஆஸ்திரியாவின் கரிம வேதியியல், மைக்ரோ அனாலிசிஸ் துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். பின் தாயகம் திரும்பி, பல்வேறு பல்கலைகளில் வேதி தொழில்நுட்பவியல், மருந்தியல் துறை உள்ளிட்ட புதிய துறைகளை உருவாக்கினார்.இந்தியன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை மீட்டுருவாக்கினார். சுதந்திரத்துக்குப் பின், டில்லி பல்கலையில் வேதியியல் துறை தலைவரானார். பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1975, செப்டம்பர் 27ல், தன் 75வது வயதில் மறைந்தார்.இந்தியாவின் கரிம வேதியியல் துறைக்கு அடித்தளமிட்ட அறிவியலாளர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை