உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டு போடாவிட்டால் ஒரு நாள் லீவு கட்: உத்தரவு போட்டு பின்வாங்கிய தமிழக அரசு

ஓட்டு போடாவிட்டால் ஒரு நாள் லீவு கட்: உத்தரவு போட்டு பின்வாங்கிய தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு ஊழியர்கள் ஓட்டு போடாவிட்டால் அவர்களது தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு கணக்கிலிருந்து இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என நேற்று (ஏப்.,18) தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.தமிழகத்தில் இன்று (ஏப்.,19) மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவை ஊக்குவிக்கும் பொருட்டு அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைகளில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்; ஓட்டு போடாவிட்டால் அவர்களது தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு கணக்கிலிருந்து இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என நேற்று (ஏப்.,18) தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஓட்டளிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் 'கட்' ஆவதுடன், தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு கணக்கிலிருந்து இருந்தும் ஒரு நாள் கழிப்பதாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு இன்று திரும்ப பெறப்பட்டது. உத்தரவு போட்டுவிட்டு அடுத்த நாளே தமிழக அரசு வாபஸ் பெறப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

M Sundaram
ஏப் 20, 2024 07:00

இந்த நாட்டின் சட்டப்படி குற்றப்பின்னணி உள்ளவர் ஆட்சி செய்பலாம் ஆனால், ஒரு சாதாரண அரசு பணியில் சேர முடியாது


M Sundaram
ஏப் 20, 2024 05:24

படிக்காதவன், படித்த அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் இந்த உருப்படாத சிஸ்டம் இருக்கும் வரை இந்த நாடு சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கும், சொல்லப்போனால் மனிதன் அழியும் வரை FIR போடப்பட்டவன் அரசு பணியில் சேர முடியாது ஆனால் அதே அரசு ஊழியர்களுக்கு உத்தரவு போட வரும் அரசியல்வாதிகள் மீது கொலை வழக்கு இருந்தால் கூட தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி செய்யலாம், இது என்னயா கேவலமான சட்டம்? இதுக்கு பேரு ஜனநாயகமா? வாக்களிக்கும் மக்களாவது திருந்த வேண்டும், வேட்பாளரின் தகுதியை பார்க்க வேண்டும், அவரடைய பாரம்பரிய சின்னத்தை அல்ல ஓட்டுக்காக சந்து பொந்தெல்லாம் நாய் மாதிரி அலையும் இவர்கள் அடுத்த முறை தேர்தல் வரும்போது தான் கண்ணுக்கு தெரிவானுங்க வழக்குகள் இல்லாத அரசியல்வாதி இருக்காங்களா? இதற்கான சட்ட திருத்தம் அவசியம் தேவை யார் செய்வாங்க??? கடவுள் கூட இவனுங்களுக்கு எப்படி துனை நிற்கிறார்? கடவுளே இல்லை என்பவர்கள் கூட ஆட்சி செய்கிறார்களே எப்படி?


பிரேம்ஜி
ஏப் 19, 2024 21:52

ஓட்டுப்போட்டு என் கடமையைச் செய்யச் சொல்லும் அறிவாளிகள் , தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகளை அவர்கள் கடமையைச்செய்ய ஏன் கட்டாயப்படுத்துவதில்லை? என்ன நியாயம் இது? நீங்களும் உங்கள் வெட்டி ஜனநாயகமும்!


katharika viyabari
ஏப் 19, 2024 21:39

இந்த உத்தரவே இவர்களுக்கு பெரிய பிரச்சனையை கிளப்பிடும்னு அறிவார்ந்த அறிவாலய அறிஞர்கள் இருநூறு ரூபாயை வாங்கிட்டு கூவியிருப்பார்கள்


M Sundaram
ஏப் 20, 2024 07:06

ஆமாங்க, சரியாக சொன்னீங்க


Raghavan
ஏப் 19, 2024 20:45

எல்லா அரசு ஊழியர்களும் சென்ற தேர்தலில் வோட்டு போட்டதே ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பித்தான் மூன்று வருடங்கள் ஆகியும் அவர்களின் ஓய்வு ஊதியம் போன்றவற்றில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் தான் அந்த உத்தரவை வாபஸ் வாங்கிவிட்டார்கள் இப்படி ஒரு கட்டுபாடு கொண்டுவந்திருந்தால் எல்லா அரசு ஊழியர்களும் அரசுக்கு எதிராகத்தான் வோட்டு அளித்திருப்பார்கள் அதனால் தான் உத்தரவை வாபஸ் வாங்கிருக்கிறார்கள்.


rama adhavan
ஏப் 19, 2024 20:31

ஓட்டுப் போட்டு என்ன பயன்ஊழலை ஓழிக்க முடியவில்லை பணம் உள்ளவன் வெல்கிறான் பணம் சேர்க்கிறான்தோற்றவன் கேலிக்கு உள்ளாகிறான் இது என்ன மக்கள் ஆட்சியோ, புரியவில்லை


Varadarajan Nagarajan
ஏப் 19, 2024 19:53

சுதந்திரதினம் கொண்டாடக்கூட சுதந்திரமாக இல்லாமல் கையில் துப்பாக்கியோடுதான் நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் அதுபோல் ஜனநாயக நாட்டில் பல வாக்குகள் பணம்கொடுத்தும் மறைமுகமாக மிரட்டியும்தான் பெறப்படுகின்றது


Naga Subbiah
ஏப் 19, 2024 19:22

வோட்டு போட்டால் மட்டுமே லீவு என்று அறிவித்திருந்தால் எல்லோரும் அரசு & தனியார் அலுவலகங்கள் வோட்டு போட்டிருப்பார்கள்


சின்னமணி தனபால்
ஏப் 19, 2024 18:55

ஓட்டுக்கு நோட்டு கொடுக்கும் கட்சி எதுவாக இருப்பினும் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையேல் ஜனநாயகம் என்பது வெறும் கேலிக்கூத்து ஆகி விடும்.


Prabakaran J
ஏப் 19, 2024 18:26

TASMAC govt appadi than irrukkum


மேலும் செய்திகள்




 ...

1 hour(s) ago  






அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை