உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இணைய சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு எச்சரிக்கை

இணைய சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இணைய வழி சூதாட்டத்தால், ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இணையவழி சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 1-3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் www.tnonlinegamingauthority.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kasimani Baskaran
மே 03, 2024 05:56

டெக்னிக்கலாக தடை செய்ய முடியாது என்ற பின்னும் நாடகம் போடுவது சிறப்பான காமடி


Ramesh Sargam
மே 02, 2024 20:24

போதைப்பொருட்கள் விநியோகம் செய்பவர்கள், அவர்களுக்கு சன்மானம் கொடுப்பவர்கள் இவர்களுக்கு தண்டனை எதுவும் இல்லையா?


Sree
மே 02, 2024 20:22

கண்துடைப்பு


GMM
மே 02, 2024 20:22

நோக்கம் நன்று மாநில அளவில் சட்டம் இயற்றலாம் என்றால், மாவட்ட அளவிலும் முடியும் இன்டர்நெட், பண பரிவர்த்தனை விவரம் மாநிலம் கீழ் வராது மத்திய அரசு தான் தேசிய அளவில் சட்டம் இயற்ற முடியும் இது அதிகார துஸ்பிரயோகம்?


Natarajan Ramanathan
மே 02, 2024 20:19

சாராய கம்பெனியை ஆதரித்து ஊத்தநிதி டி சர்ட் போட்டு வருகிறார் அவருக்கு என்ன தண்டனை?


ஆரூர் ரங்
மே 02, 2024 20:11

லாட்டரி கிங்கிடம் 500 கோடி பெற்ற புனித கழக ஆட்சிக்கு இதையெல்லாம் செய்ய சற்றும் தகுதியுண்டா?


ஆரூர் ரங்
மே 02, 2024 20:09

லாட்டரியை யும் மதுவையும் பின்னர் மெத்தையும் மாநிலத்துக்கு அறிமுகப்படுத்தியது திமுக தான். இப்போ எதுக்கு இந்த மிரட்டல்?


Jaganathan Ravichandran
மே 02, 2024 19:50

ட்ரீம் என்பது என்னஅந்த சூதாட்டம் பரவாயில்லியா


Jaganathan Ravichandran
மே 02, 2024 19:48

Dream என்பது என்ன… அத்தகைய சூதாட்டத்தை மட்டும் எப்படி அனுமதிக்கிறீர்கள்?


Jaganathan Ravichandran
மே 02, 2024 19:48

Dream என்பது என்ன… அத்தகைய சூதாட்டத்தை மட்டும் எப்படி அனுமதிக்கிறீர்கள்?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ