உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீண் விளம்பரத்தை தேடுவதில் எதிர்க்கட்சி முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்

வீண் விளம்பரத்தை தேடுவதில் எதிர்க்கட்சி முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே பிரதான எதிர்க்கட்சி முனைப்புடன் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதம் நடத்த கோரி, சட்டசபையில் அ.தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sk5vlcdi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வீண் விளம்பரம்

இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. பிரச்னை குறித்து அவையில் பேசாமல் வெளியில் சென்று பேசுவது அவையின் மாண்புக்கு அழகல்ல. வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே பிரதான எதிர்க்கட்சி முனைப்புடன் இருக்கிறது. கள்ளக்குறிச்சி துயர சம்பவத்தில் தமிழக அரசு அக்கறையோடு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின்

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது: விதிகளின் படி ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது. மத்திய அரசு கொரோனா உள்ளிட்ட காரணங்களை காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. சமவாய்ப்பு கிடைக்க கல்வி, சமூகம், பொருளாதாரம் அவசியமாக இருக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

vijay
ஜூன் 28, 2024 10:39

விளம்பரம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து நடக்கும் விடியாத ஆட்சியை என்னவென்று சொல்வது முதல்வர் அய்யா?


இராம தாசன்
ஜூன் 27, 2024 15:58

எதிர கட்சியினர் பாரளுமன்றத்தில் செயல்படுவதை சொல்கிறாறோ?


Raghavan
ஜூன் 26, 2024 21:28

நீங்க எதிர் கட்ச்சியாக இருமதபோது சட்டையை கிழித்துக்கொண்டு காரிலிருந்து இறங்கவில்லையா? உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி.


bal
ஜூன் 26, 2024 20:09

தமிழ் நாட்டில் இளம் விதவைகள் உருவாகின்றன என்று கனி அக்கா சொல்லிதான் மற்றும் பல பொய்கள் சொல்லித்தானே விளம்பரம் பண்ணி ஆட்சியில் உள்ளை. உனக்கு இந்த பேச்சு ஒரு கேடா


ராம்கி
ஜூன் 26, 2024 20:05

யார் தேவையற்ற விளம்பரம் தேடிக்கொள்வதில் மத்திய அரசின் சாதனைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிகொள்வதில் விருப்பமுடையவர் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படும் அரசு திட்டங்களுக்கு உங்கள் தகப்பனார் பெயர் வீண் விளம்பரமாக தெரியலையா?ஏன் இப்படியா பொய் சொல்வது.


karutthu
ஜூன் 26, 2024 19:27

ஓன்றிய அரசு என வாய்க்கு வாய் சொல்லும் நீங்கள் எப்படி இப்பொழுது மத்திய அரசு என சொல்கிறீர்கள்


krishna
ஜூன் 26, 2024 17:19

HELLO SIR EDHIR KATCHI THALAIVARAAGA SHIRT KIZHITHU KONDU GOVERNER KITTA POYI AATCHIYA KALAIKA


Lion Drsekar
ஜூன் 26, 2024 16:47

இக்கரையும் அக்கறையும் வேறு வேறுதான் ஆனால் தொழில் என்று வந்தால் எல்லா கரைகளும் ஒன்றுதான். மக்கள் டிவி பார்க்குமிடத்தில் இருக்கிறார்கள்


D.Ambujavalli
ஜூன் 26, 2024 16:44

எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் ? எங்கேயோ கேட்ட குரல் இன்னும் நூறு பேர் கூட சாவார்கள், நீங்கள் யார் அதைத் தட்டிக் கேட்க ? நல்ல சித்தாந்தம்


என்றும் இந்தியன்
ஜூன் 26, 2024 16:40

தன்னை பற்றி தன் கட்சியை பற்றி இவ்வளவு உண்மையாக யாரும் சொல்வதில்லை.. என்ன ஸ்டாலின் I.N.D. I.A. எதிர்க்கட்சி தானே அதைத்தானே சொல்கின்றீர்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை