உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1.77 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் டுவிஸ்ட்! ஓ.பன்னீர்செல்வத்துக்கு வந்த சிக்கல்

ரூ.1.77 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் டுவிஸ்ட்! ஓ.பன்னீர்செல்வத்துக்கு வந்த சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடிக்கு சொத்துகள் குவித்ததாக தி.மு.க., ஆட்சியில் வழக்கு பதிவானது. இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட கோர்ட்டில் இருந்து சிவகங்கை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t38d3adl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., அரியணையில் அமர்ந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை வழக்கில் இருந்து விடுவித்து 2012ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறார். அவரின் விசாரணைக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானது.இந் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மீதான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது; வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் ஜாமினை மதுரை சிறப்பு கோர்ட்டை ரத்து செய்யலாம். வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு கோர்ட்டில் நவம்பர் 27ம் தேதிக்குள் மாற்ற வேண்டும்.வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்தி 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் மதுரை சிறப்பு கோர்ட் முடிக்க வேண்டும். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மனைவி உள்ளிட்ட 2 பேர் இறந்துவிட்டதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

AMLA ASOKAN
அக் 30, 2024 10:28

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குற்றவாளியே அல்லாமல் பல்லான்டுகளாக சிறையில் ஜாமீன் கிடைக்காமல், வாழ்க்கையை தொலைத்துவிட்டு, நொந்து நூலாய் போயுள்ள பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பக்கம் ,நீதிபதி கிருஷ்ணா ஐயர் போல், தன் பார்வையை திருப்ப வேண்டும் . மாறாக எத்தனை கோடி ஊழல் வழக்காக இருந்தாலும் எத்தனை ஆண்டுகளானாலும் , இந்திய அரசியலில் அமைச்சர்கள், MLA , MP கள் தண்டிக்கப்படவே மாட்டார்கள் . வாதாடும் வழக்கறிஞர்கள் கொழுத்த பணக்காரர்களாகி விடுகிறார்கள் .


narayanansagmailcom
அக் 29, 2024 22:57

நீதி மன்றாங்கள் எந்த கேசையும் முறையாக சரியாக விசாரித்து தீர்ப்பு வழங்க மாட்டார்களா. ஏன் இவ்வளவு இடைவெளி விட்டு ஜாமீன் கொடுத்து விசாரிக்கிறார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு.


சுந்தரேசன்
அக் 29, 2024 21:36

என்ன இந்த பிச்சைக்காசுக்காக ஓரு கேஸா?மானம்போகிறது. 100 அல்லது 200 கோடி என்றால் ஒரு கெத்தாக இருக்கும்.


GMM
அக் 29, 2024 20:19

20 வருடங்களுக்கு பின் மீண்டும் ஓ.பி.எஸ் மீது விசாரணை? அரசியல், நிர்வாக, நீதிக்கு பணி ஒழுக்கம் உண்டு. மத்திய அரசு நீதித்துறையின் நிர்வாக ஒழுங்கு மீறிய நிலைபாட்டில் உறுதியான நடவடிக்கை எடுக்க தெரியவில்லை.


Lion Drsekar
அக் 29, 2024 19:19

எத்தினை லட்சம் கோடி சொத்துக்குவிப்பு இருந்தாலும் அபராதம் கட்டிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்பதை நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படித்து வருகிறோம்.


Raghavan
அக் 29, 2024 18:11

கால அவகாசம் கொடுத்து வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாளும் வாய்தா வாய்தா என்று கேட்டு கேட்டு வழக்கை இழு இழு என்று ஒரு 5 to 10 வருடங்களுக்கு பிறகு அரசு தரப்பில் சரியான ஆவணங்கள் தரப்படவில்லை என்று ஒரு போடு போட்டு கதையை முடித்துவிடுவார்கள். இதல்லாம் சும்மா ஒரு கண் துடைப்பு. எப்போது பொன்முடிக்கு கீழ் கோர்ட் தண்டனை கொடுத்து அவரும் சட்டசபை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தநிலையில் மேல் கோர்ட் அப்பீலில் தண்டனையையும் நிறுத்திவைத்து ஜாமீனும் கொடுத்து மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துவைக்க ஆளுநருக்கு பரிந்துரைத்ததோ அப்போதே என் அளவில் நீதித்துறையின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது. அதுபோல் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத மந்திரியாக ஜெயிலில் இருந்துக்கொண்டு எப்போது அரசாங்கத்தில் இருந்து சம்பளமும் இன்னும் பிற சலுகைகளும் அனுபவித்தாரோ அப்போதும் என்னால் இந்த நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை போய்விட்டது.


raja
அக் 29, 2024 17:55

டீ விற்றவர் தான் ஓ .பி .எஸ்..... ஆனால் பார் தமிழா, திராவிடம் என்ற பெயரை வைத்து எவ்வளவோ கோடிகள் கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைதிருக்கானுவோ... எனவேதான் இந்த திராவிடம் என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை அடித்து விரட்டுவோம்... முக்கியமாக இந்த ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தை அடித்து விரட்டுவோம் ..


கூமூட்டை
அக் 29, 2024 17:23

பெரியகுளம் அக்ரஹாரம் 35 வீடுகள் இவர்களின் சொத்து கைலாசநாதர் கோயில் அருகில் கொஞ்சம் 300 ஏக்கர் அளவில், சின்ன பண்ணை வீடு இரண்டு ஏக்கரில் இது தவிர மற்றவர்கள் பேரில் எவ்வளவு??


என்றும் இந்தியன்
அக் 29, 2024 17:16

ரூ 1.77 கோடி சொத்துகுவிப்பு - பன்னீர் செல்வம். சே சே சே இது அவமானத்திலும் அவமானம். திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதிகளை பாருங்கள் ரூ 430 கோடி ரூ 6,000 கோடி ரூ 45,000 கோடி, இப்படி இல்லாமல் ஒரு பெரியாஆஆ தொகை ரூ 1.77 கோடி சொத்து


Ms Mahadevan Mahadevan
அக் 29, 2024 17:10

அப்படி போடு அறிவாள.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை