உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழகத்தில் பார் கவுன்சில் தேர்தல் நடத்த உத்தரவு

 தமிழகத்தில் பார் கவுன்சில் தேர்தல் நடத்த உத்தரவு

தமிழகம் உள்ளிட்ட, 16 மாநிலங்களுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தலை, 2026, ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'பார் கவுன்சில்' எனப்படும், வழக்கறிஞர்கள் சங்க தேர்தலை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது.ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் வழக்கறிஞர்கள் சங்க பதவிக்காலம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னும் தேர்தல் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய பார் கவுன்சில்களுக்கு 2026, பிப்., 28ம் தேதிக்குள்ளும், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், கர்நாடகா, குஜராத், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல்கள் 2026, மார்ச் 15ம் தேதிக்குள்ளும் நடத்தப்பட வேண்டும். மேகாலயா, மஹாராஷ்டிரா மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல்கள் 2026, மார்ச் 31ம் தேதிக்குள்ளும், தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல்கள் 2026, ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை