உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சிறு வணிக கடன் அதிகம் வழங்க உத்தரவு

 சிறு வணிக கடன் அதிகம் வழங்க உத்தரவு

'கூட்டுறவு வார விழாவை ஒட்டி நடத்தப்படும் சிறப்பு முகாமில், சிறு வணிகப் பிரிவில், அதிகம் பேருக்கு கடன் வழங்க வேண்டும்' என, கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், பல்வேறு கூட்டுறவு வங்கிகளில், பயிர் கடன், நகைக்கடன் உட்பட பல வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுதும், நேற்று முன்தினம், 72வது தேசிய கூட்டுறவு வார விழா துவங்கியது. இதை முன்னிட்டு, கூட்டுறவு வங்கிகள் சார்பில், வரும், 20ம் தேதி வரை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமில், அதிக பயனாளிகளை சென்றடையும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். குறிப்பாக, சிறு வணிக கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கும்படி, அதிகாரிகளை கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த கடனுக்கு பிணைகள் கேட்கப்படாத நிலையில், கடன் வாங்கும் இருவரில் ஒருவர், மற்றொருவருக்கு ஜாமின் கையெழுத்து போட்டால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ