உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு: அகற்ற குழு அமைத்தது ஐகோர்ட்

பழநி கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு: அகற்ற குழு அமைத்தது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பழநி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பழநி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கிரிவலப்பாதையை வலம் வருவது வழக்கம். முக்கியமாக கார்த்திகை மாதம் துவங்கி தைப்பூசம், பங்குனி உத்திரம் என ஆறு மாத காலம், கிரிவலப்பாதை முழுவதும் பக்தா்கள் மயமாகவே இருக்கும். கிரிவலப்பாதை முழுவதும் சுமார் 2,000 முதல் 3,000 கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பழநி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பழநி கிரிவலப்பாதைகளில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் தாமதமின்றி அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கிரிவலப்பாதையில் தள்ளுவண்டிக் கடைகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜன.,9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
ஜன 04, 2024 04:50

அப்படியே திமுக வையும் அகற்றினால் 99 சதவிகித ஆக்கிரமிப்புகள் ஓயும்.


Ramesh Sargam
ஜன 04, 2024 00:25

பொதுவாகவே தமிழகத்தில் கோவில்களின் அருகில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவேண்டும்.


சண்முகம்
ஜன 03, 2024 23:03

திருவண்ணாமலையில் நடவடிக்கை எப்பொழுது?


Dharmavaan
ஜன 03, 2024 17:14

ஆக்கிரமிப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே சட்டத்திற்கு கட்டுப்படாதவர்கள்


Dharmavaan
ஜன 03, 2024 17:14

0000


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி