உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி வந்த வால்பாறை பறவைக்காவடி

பழநி வந்த வால்பாறை பறவைக்காவடி

பழநி :பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பிறகும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 48 ஆண்டுகளாக பால்காவடி, தீர்த்த காவடி, மயில் காவடி எடுத்து வருகின்றனர். நேற்று (பிப்.22) அவர்கள் பழநி வந்தனர். சண்முக நதி அருகே ராட்சத கிரேனில் 9 பக்தர்கள் பறவைக்காவடியில் தொங்கியபடியும், 10 பேர் 15 அடி நீள அலகு குத்தியும் கிரி வீதியில் வலம் வந்தனர். அலகு குத்தி வந்தவர்களிடம் பலரும் குழந்தைகளை கொடுத்து ஆசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Easwar Moorthy
பிப் 23, 2024 14:43

இதனால் வழியில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல்


Yuvaraj Velumani
பிப் 23, 2024 19:06

அப்படித்தா பக்தர்கள் வருவார்கள். உங்களுக்கு என்ன எரிச்சல். இந்து மத பண்டிகை கிளம்பி வந்தர வேண்டியது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை