வரும் 2026 தேர்தலுக்கு பின் பழனிசாமி ஓடி விடுவார்
தி.மு.க., என்றால் குடும்ப கட்சி என்ற நிலை மாறி, குடும்பம் தான் அரசு என மாறிவிட்டது. மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை முடிவு கட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருகிறது. வரும் 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவோம். கடந்த இடைத்தேர்தலில் மக்களை பட்டியில் அடைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்த தி.மு.க., அரசியல் செயல் அனைவருக்கும் தெரியும். பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் பா.ஜ., உட்பட அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தலில் புறக்கணித்துள்ளது.பழனிசாமி முதல்வரானது, கட்சி பொதுச்செயலர் ஆனது எல்லாம் லாட்டரி யோகம். தான் சிறைக்கு செல்லாமல் இருப்பதிலும், கொலை, கொள்ளை வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக தி.மு.க.,வை அனுசரித்து நடந்து கொள்கிறார். 2026ம் ஆண்டிற்கு பின், கட்சி பொறுப்பை தொடர முடியாமல் ஓடி விடுவார். தொண்டர்களே விரட்டி அடிப்பர்.தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,