வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆங்கிலேயர்கள் நமக்காக கட்டிய பொக்கிஷம் இந்த பாலம். இதை தொடர்ந்து பராமரித்து நினைவு சின்னமாக பாத்து காக்க வேண்டும்.
ராமேஸ்வரம்: -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பழைய ரயில் துாக்கு பாலத்தை பொறியாளர்கள் திறந்து மூடி ஆய்வு செய்தனர்.1914ல் ஆங்கிலேயர் அமைத்த பாம்பன் ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலவீனமானதால், புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. 111 வயதான பழைய ரயில் பாலத்தின் துாக்கு பாலம் ராமேஸ்வரம் தீவின் அடையாள சின்னமாக உள்ளதால், இதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதிய பாலம் கட்டுமானத்திற்காக 2024 ஏப்., முதல் பழைய துாக்கு பாலத்தை திறக்காமல் மூடி வைத்தனர்.அன்று முதல் துாக்கு பாலத்தை பராமரிக்காமல் விட்டதால், உப்பு காற்றில் துருப்பிடித்து எலும்புக்கூடாய் காட்சியளித்தது. இதனால் பாலம் இடிந்து விழும் தருவாயில் உள்ளது என நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து மதுரை ரயில்வே கோட்டப் பொறியாளர் சந்தீப் பாஸ்கர், பொறியாளர்கள் நேற்று மதியம் துாக்கு பாலத்தை திறந்து மூடி ஆய்வு செய்தனர். இதில் துாக்கு பாலம் நன்றாக இருப்பதாகவும், துருப்பிடிக்காத வகையில் ரசாயனம் கலந்த அலுமினிய பெயிண்ட் பூசப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.
ஆங்கிலேயர்கள் நமக்காக கட்டிய பொக்கிஷம் இந்த பாலம். இதை தொடர்ந்து பராமரித்து நினைவு சின்னமாக பாத்து காக்க வேண்டும்.