உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: மார்ச் 28ல் திருக்கல்யாணம்

குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: மார்ச் 28ல் திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 28ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.பங்குனித் திருவிழாவையொட்டி நேற்று காலை கொடிப்பட்டம் ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டது. காலை 8:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர்.சிவாச்சாரியார்கள் தங்கக் கொடிக்கம்பத்தில் கொடியேற்றினர். அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது. திருவிழா நம்பியார் அஜித் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மத்தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோயில் துணை கமிஷனர் சுரேஷ், பணியாளர்கள் பங்கேற்றனர்.கொடியேற்றம் முடிந்ததும் கோயிலினுள் குயவர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு அபிஷேகங்கள் முடிந்து இரவு தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா நடந்தது.திருக்கல்யாண நிகழ்ச்சிதிருவிழா நடைபெறும் மார்ச் 30வரை காலையில் தங்கச் சப்பரம், தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்கக் குதிரை வெள்ளிப் பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 21 இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சி, மார்ச் 22ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 23 காலையில் கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, மார்ச் 24ல் பங்குனி உத்திர விழா, மார்ச் 26ல் சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடக்கிறது.மார்ச் 27 மதியம் பச்சைக்குதிரை ஓட்டம், இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம், மார்ச் 28ல் திருக்கல்யாணம், மார்ச் 29ல் தேரோட்டம், மார்ச் 30ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி