உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பானிபூரி வியாபாரி கார் ஏற்றி கொலை: ஒருவர் கைது

பானிபூரி வியாபாரி கார் ஏற்றி கொலை: ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவையைச் சேர்ந்தவர் மீரான் 47. டூவீலரில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் வியாபாரம் முடித்து வீடு முன்பாக டூவீலரில் பொருட்களை இறக்கி கொண்டிருந்தபோது இம்ரான் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், அவர் மீது மோதி சிறிது தூரத்துக்கு இழுத்துச் சென்றது. வீட்டுக்கு அருகிலேயே மீரான் மனைவி கண் முன் ரத்த வெள்ளத்தில் இறந்தார். போலீசாருக்கு தெரிவித்தும் உடனடியாக வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்டார்மடம் போலீசார் கார் ஓட்டி கொலை செய்த இம்ரானை கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்ததா எனவும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ