உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வறட்சியின் பிடியில் சிக்கப்போகும் மக்கள்

 வறட்சியின் பிடியில் சிக்கப்போகும் மக்கள்

வைகை அணையின் உபரி நீரானது, மதுரை, உசிலம்பட்டி, தேனி, ஆண்டிப்பட்டி, திண்டுக் கல், நிலக்கோட்டை பகுதிகளை சுற்றியுள்ள, கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டதே, 58 கிராம கால்வாய் திட்டம். ஆனால், திட்டம் இன்னும் உயிர் பெறவில்லை. சில வாரங்களுக்கு முன், வைகை அணை நிரம்பிய போதும், 58 கிராம கால்வாயில், அரசு தண்ணீர் திறந்து விடாததால், 114க்கும் மேற்பட்ட கிராமங்கள், தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்தன. பின், தி.மு.க., அரசு தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதனால், பயனடையும் கிராமங்களுக்கு, தண்ணீர் சென்றடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளை துார்வாரி முறையாக பராமரித்தால் மட்டுமே, நீரோட்டம் சாத்தியமாகும் என்ற நிலையில், தங்களை வறட்சியின் பிடியில் சிக்க வைத்துள்ள, தி.மு.க., அரசின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். - - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை